Link copied!
Sign in / Sign up
19
Shares

ஆண் குழந்தைக்கான அற்புதமான 10 பெயர்கள்

பெயர் என்பது ஒருவரின் அடைப்படை தேவையான விஷயங்களில் மிகவும் முக்கியமானது. இது ஒருவரின் அடையாளமாக திகழ்வது. ஒருவரை சுட்டிக்காட்ட உதவுவது அவரின் பெயர் மட்டுமே. உங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயர் சிறந்த பெயராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது பெற்றோர் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். என்ன பெயர் வைப்பது, எங்கு தேடுவது என குழம்பிவிடுகிறார்கள். இங்கு ஆண் குழந்தைக்கான அற்புதமான 10 பெயர்களை பார்க்கலாம்.

1 ஆதிவ்(Aadiv)

ஆதி என்பது தொடக்கம் என்று பொருள்படும். ஆதிவ் என்றால் மென்மையான, கனிவுள்ள என்று அர்த்தம். உங்கள் வாழ்வின் துவக்கமாய் அமைந்திருக்கும் குழந்தைக்கு ஏற்ற சிறந்த பெயர்.

2 பவின்(Bhavin)

பவி என்றால் புனிதமான என்று பொருள். மேலும், பவின் என்றால் சிறந்த மனிதன் என்று பொருள். உங்கள் குழந்தை வாழ்வில் சிறந்தவராய் இருக்க ஏற்ற பெயர்.

3 தனவ்(Tanav)

தனவ் என்றால் புல்லாங்குழல், கவர்ச்சியான, மென்மையான என்று அர்த்தமாகிறது. புல்லாங்குழலின் இனிமையான ஓசை போல், இனிமையான உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர்.

4 தர்சிக்(Daarshik)

மனைதை கவர்தல் அல்லது மற்றவர்களின் மனதை கவர்தல் என்பது தர்சிக் என்பதன் பொருளாகிறது. உங்கள் மனதை கவர்ந்த சிறிய குழந்தைக்கு ஏற்ற பெயர்.

5 பரஸ்(Faraz)

பரஸ் என்றால் ஆறுதல், நிவாரண, எளிதானது, நிதானம் என்று பொருள். உங்கள் வாழ்வில் உங்களுக்கு ஆறுதல் அளிக்க வந்த உங்கள் செல்லத்துக்கு ஏற்ற பெயர்.

6 ஜியாஸ்(Ghiyas)

ஜியாஸ் என்றால் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுதல் என்று அர்த்தம். உங்கள் கஷ்டத்தை போக்கி இன்பத்தை கொடுக்க வந்த உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர்.

7 ஹாசிக்(Haaziq)

நுண்ணறிவு, திறன்வாய்ந்த என்பது ஹாசிக் என்பதன் பொருளாகிறது. அனைத்து திறமைகளுடன் சிறந்து விளங்கப்போகும் உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர்.

8 இர்வன்(Irvan)

இர்வன் என்றால் கடல்களின் அரசன், நீரால் நிரப்பப்பட்ட, கடல், மேகம், அரசன் என்று பொருள். உங்கள் வீட்டு குட்டி இளவரசனுக்கு ஏற்ற பெயர்.

9 லகன்(Lahan)

லகன் என்றால் சிறிய, சிறந்த மற்றும் தலை சிறந்தவன் என்று பொருள். உங்கள் அன்பிற்குரிய சிறிய செல்லத்திற்கு ஏற்ற பெயர்.

10 மதின்(Madin)

மதின் என்றால் மகிழ்ச்சிகரமான என்று பொருள். உங்கள் மகிழ்ச்சிகரமான குட்டி செல்லத்திற்கு ஏற்ற பெயர்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon