Link copied!
Sign in / Sign up
12
Shares

ஆண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோரின் கடமை என்றே சொல்லலாம். அதை கடமையாய் நினைத்து எந்த பெற்றோரும் பெயர் வைப்பதில்லை. பெற்றோரின் குழந்தைகளுக்கான பெயர்களை தேடி தேடி அலுத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அழகிய பெயரை மட்டும் தேர்வு செய்யாமல், அழகாய் அர்த்தமுள்ள பெயர்களை தேர்வு செய்வது சிறந்தது. இங்கு ஆண் குழந்தைக்களுக்கான அழகிய 10 பெயரை பார்க்கலாம்.

1 தரண்

தரண் என்றால் சிறந்தவன், ஆரோக்கியமானவன், சிறியதிலும் சிறந்தவன் என்று பொருள்.

2 ஹரிக்கிரண்

கடவுளின் ஒளிக்கதிர்கள் என்பது இதன் பொருள். ஹரி என்பது கடவுள் விஷ்ணுவின் மற்றொரு பெயர்.

3 ஆரிவ்

ஆரிவ் என்றால் ஞானத்தின் ராஜா, அறிவின் அரசன் என்பது இதன் பொருள்.

4 ஆகில்

ஆகில் என்றால் இளவரசன் என்று பொருள். இது முஸ்லீம் குழந்தைகளுக்கும் ஏற்ற பெயராக இருக்கும். உங்கள் வீட்டு குட்டி இளவரசனுக்கான சிறந்த பெயர்.

5 அன்ஜம்

நட்சத்திரங்கள் என்பது இதன் பொருள். இதுவும் முஸ்லீம் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்.

6 சைகாம்

சைகாம் என்றால் சிங்கம், ஆற்றல் உடையவன் என்று பொருள். இதுவும் முஸ்லீம் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்.

7 ஹீரம்

ஹீரம் என்றால் உயர்ந்த, உன்னதமான என்று பொருள். இது கிறிஸ்துவ குழந்தைகளுக்கான சிறந்த பெயர்.

8 ஆரோன்

ஆரோன் என்றால் அறிவாளி என்று அர்த்தம். இதுவும் கிறிஸ்துவ குழந்தைகளுக்கான சிறந்த பெயர்.

9 பாஜீஷ்

பாஜீஷ் என்றால் வெற்றி பெற பிறந்தவன் என்று பொருள். உங்கள் மனதை வெற்றி கொண்ட செல்லத்திற்கான சிறந்த பெயர்.

10 ப்ரித்தீஷ்

அன்பின் இறைவன் என்பது இதன் அர்த்தம். உங்கள் அன்பை திருடிய அழகனுக்கான சிறந்த பெயர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon