Link copied!
Sign in / Sign up
61
Shares

உங்கள் மனைவியின் மனதை வெல்ல 7 வழிகள்

காதல் என்பது நீங்கள் உங்கள் துணைக்காக செய்யும் சின்ன சின்ன அழகான, உற்சாகமான விஷயங்கள் மட்டுமல்ல. அவரிடம் எதையும் எதிர்பாராது, அவருக்காக எண்ணிலடங்கா விஷயங்களை செய்வதே காதலாகும். அவர் ஒரு ஜாடியின் மூடியை திறக்க முடியாமல் கஷ்டப்படும் போது, நீங்கள் அதை திறந்து கொடுத்தாலே போதும். உங்கள் மீது அளப்பரியா அன்பை பொழிவார். இந்த மாதிரி சிறு சிறு விஷயங்கள் தான் உங்களை அவர்களுக்கு சூப்பர் ஹீரோவாக காட்டும்.இங்கே, உங்கள் மனைவியின் மனதை வென்று, அவரை உங்கள் மீது காதல் கொள்ள வைக்கும் 7 வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

1 அவரை புரிந்து கொள்ளுங்கள்

எப்படி நம் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையோ, அதே போல் தன் பெண்களும் வித்தியாசமானவர்கள். நீங்கள் அவருக்காக கதவை திறந்து விட்டால், ஒருத்தர், அதை அன்பின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வார், ஆனால் வேறு ஒருவரோ அதை உதவியாக எடுத்துக்கொள்வார். அதனால், உங்கள் மனைவிக்கு என்ன பிடிக்குமோ அதை செய்து அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

2 தொடர்பில் இருப்பது அவசியம்

ஒரு நல்ல உறவு என்பதற்கான அடையாளமே, உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுவதும், அவர் பேசுவதை நீங்கள் பொறுமையுடன் கேட்பதே ஆகும். உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது பற்றி உங்கள் துணையிடம் பேசும் போது, உங்கள் இருவருக்கும் உள்ள பிணைப்பு மேலும் அதிகமாகும். ஐஸ் கிரீம்களில் அவருக்கு சாக்லேட் பிடிக்கலாம் உங்களுக்கு வென்னிலா சுவை பிடிக்கலாம். நீங்கள் இருவரும் பேசிக்கொண்டால், இந்த மாதிரி சமயங்களில் விட்டுக்கொடுத்தோ அல்லது வேறு ஏதாவது தீர்வை காணலாம். அனேகமாக, இறுதியில், நீங்கள் சாக்லேட் சிரப் நிறைந்த வென்னிலா ஐஸ் கிரீமை தான் சுவைப்பீர்கள்.

3 உங்களின் ஈடுபாடு முக்கியமானது

உங்கள் மனைவியின் மனதை வெல்ல, நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். ஒரு தகப்பனாக உங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்துதல், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை கண்டிப்பாக உங்கள் மனைவியின் மனதை உருக செய்துவிடும். உங்களை கட்டியணைத்து கொண்டாலும் ஆச்சரியமில்லை.

4 அவர் மனதில் இருப்பதை கேளுங்கள்

பெண்கள் பொதுவாக அதிகமாக பேசுவார்கள். அவர்களுக்கு பேசுவது என்றால் கொள்ளை பிரியம். மற்றவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக உங்களுடைய கவனத்தை. எனவே, நீங்களாக ஒரு உரையாடலை ஆரம்பியுங்கள். அவரின் நாள் எப்படி இருந்தது என்று கேளுங்கள். இது போதும் அவருக்கு. உங்களுடன் மகிழ்ச்சியாக பேசுவார். அதுமட்டுமில்லாமல், அவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் இது உணர்த்தும்.

5 அவர் உங்களுக்கு தேவை என்பதை உணர்த்துங்கள்

அவருக்கு நீங்கள் வேண்டும் என்பதை விட, உங்களுக்கு நிச்சயமாக அவர் தேவை என்று தான் சொல்ல வேண்டும். இதை நீங்கள் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். உங்களுள் இருக்கும் ஒரு வெறுமையை, உங்களின் தாய் மற்றும் உங்கள் துணையை தவிர யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அவர் உணர்ச்சிவசப்படுபவர் என்றாலும், உங்கள் உணர்ச்சிகளை நன்றாக புரிந்து கொள்வார்.

6 செல்லம் கொடுத்தல்

பெண்கள் மத்தியில் இது நிச்சயமாக வேலை செய்யும். உங்கள் துணை, தன் வாழ்க்கை முழுவதையும், உங்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் அர்பணிக்கிறார். எனவே, அவரை தக்க மரியாதையுடன், ராணி போல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவருக்கு என்ன வேண்டுமென்றாலும் அதை கொடுங்கள்.

7 அவரை அவராகவே இருக்க விடுங்கள்

நீங்கள் அவரின் குணத்தை பார்த்து தான் காதல் வயப்பட்டீர்கள். அவரின் அழகை பார்த்து மட்டுமல்ல. அவரின் ஆர்வத்தினால் ஈர்க்கப்படீர்கள். அவரின் நடத்தையை பார்த்து காதலில் விழுந்தீர்கள். உங்களிடம் சௌகரியமாக உணர்ந்ததால் தான், உங்களிடம் அவர் அவராக இருந்தார். இதனால் தான் நீங்கள் அவர் மேல் அளவில்லா காதல் கொண்டீர் என்பதை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

உங்களின் மனைவி மீது அன்பை பொழிந்து அவரின் மனதை வெல்லுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
50%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon