Link copied!
Sign in / Sign up
65
Shares

தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி?

நெல்லிக்காய் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஓடிவிடுகின்றனர். தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது என்று சொன்னால், அவர்களது பதில் கசக்கும் என்பதே. ஆமாம், பச்சையாக சாப்பிட்டால், முழுதாக ஒன்றை சாப்பிடுவதே கஷ்டம். என்ன செய்யலாம்? உடனே நமக்கு தோன்றுவது கடைகளில் தேன் நெல்லிக்காய் கிடைக்கிறது என்பது, ஆனால் விலை அதிகம். உண்மையான தேனில் தான் ஊற வைப்பார்களா என்றால், சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகு உபயோகிப்பதாக நாம் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டிருப்போம். அப்போ என்னதான் செய்யலாம் என்றால், வீட்லேயே செய்ய வேண்டியது தான். அதற்கான  வழி முறைகளை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 1 கிலோ

பால் - இரண்டு கரண்டி

வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கிலோ

செய்முறை

1 ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதில் பரப்பி வையுங்கள். வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

2 பால் கலந்த தண்ணீர் சூடானதும், நெல்லிக்காய் பரப்பிய இட்லி தட்டுகளை வைத்து, இட்லி பானையை மூடி அவித்து எடுக்கவும்.

3 அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம் என்றால் சுமார் ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவாக சேர்பவர்களுக்கு. இனிப்பு அதிகம் வேண்டும் என்றால் ஒரு கிலோ வெல்லம் சேர்க்கலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சுங்கள்.

4 அதிகம் காய்ச்சாமல், பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் இறக்கி விடவும். இதில் வெந்த நெல்லிக்காயைப் போட்டு, குளிர்சாதனப்பெட்டியில் ( ஃபிரிட்ஜுல ) வைத்துவிடுங்கள்.

ஊற ஊற, தினமும் ஒன்றாக எடுத்து சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும். நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்த பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிக்கலாம். நெல்லிக்காயின் சத்துகள் இறங்கி இருப்பதால், அதையும் வீண் பண்ண வேண்டாமே. இதை சாப்பிட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon