Link copied!
Sign in / Sign up
83
Shares

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் என்பது சவாலான ஒன்று தான். நீங்கள் ஒரு புதிய அம்மா அல்லது குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தாய்ப்பால் பற்றி ஒரு சில சந்தேகம் ஏற்படுவது இயற்கை தான். காயபடுத்துமா? எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அடிக்கடி நான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? நான் எப்போது உதவி கேட்க வேண்டும்? என்பவையும் உங்கள் சந்தேகத்தில் அடங்கும். உங்களது சந்தேகங்களுக்கு பதிலளித்து, உங்களது கவலையை போக்கிட தாய்ப்பாலூட்டும் தாய்கள் தெரிந்து வேண்டியவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

1 வலியை எப்படி சமாளிக்க வேண்டும்?

முதலில் தாய்ப்பால் கொடுக்கும் போது கொஞ்சம் காயம் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உங்கள் மார்பக காம்புகளில் முதல் சில வாரத்தில் புண் அல்லது வெடிப்பு ஏற்படுவது முற்றிலும் சாதாரணமானது. நீங்கள் உங்கள் குழந்தையை தாய்ப்பால் ஊட்ட மாற்றும் போது லேசிங் நுட்பத்தை முயற்சி செய்யலாம். குழந்தையின் வாயில் மார்பக காம்பு ஆழமாக இருக்கும்போது, அவர்கள் பாலை வெளியேற்ற நாக்கை உபயோகிக்க வேண்டி இருக்கும். மார்பக காம்பு போதிய அளவு இல்லாவிட்டால், நாக்கால் தேய்த்தல் மற்றும் பாலிற்காக மார்பக காம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.

2 எப்போதெல்லாம் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கலாம்?

தாய்மார்கள் பொதுவாக பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பார்கள். குழந்தைக்கு பிறந்த முதல் மாதத்தில் நாளொன்றிற்கு 8 முதல் 12 முறை கட்டாயம் பால் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதாக உணர்ந்தால், ப்பார்முலா பாலை கூட உங்கள் குழந்தைக்கு ஊட்டலாம். ஏனெனில், தாய்ப்பால் ப்பார்முலா பாலை விட மிக எளிதில் செரித்துவிடுகிறது. இதனால் உங்களது குழந்தையின் செரிமான மண்டலம் விரைவாக வேலை செய்து, அவர்களின் பசியை தூண்டுகிறது. 1 முதல் 2 மாதத்தில் இருக்கும் குழந்தைகள், நாளொன்றிற்கு 7 முதல் 9 முறை தாய்ப்பால் குடிப்பார்கள். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் அடிக்கடி பால் குடிப்பதை குறைத்திருப்பார்கள். சிலர் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம், மற்றவர்களுக்கு 2 அல்லது 3 மணிநேரம் கூட எடுக்கலாம். பிறந்த குழந்தைகள் இரவில் கூட 4 மணி நேரத்திற்கு மேல் உணவு இல்லாமல் இருக்க கூடாது.

3 குழந்தை பசியாக இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

குழந்தை அழுவது பசியின் ஒரு தாமதமான அடையாளம் ஆகும். பொதுவாக, உங்கள் குழந்தை அழ தொடங்குவதற்கு முன் நீங்கள் உணவளிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் பசியை குறிக்கும் சில அறிகுறிகள் - வாயைத் திறந்தல் மற்றும் நாக்கை வெளியே நீட்டுதல், வாயில் கைகளை வைத்து கொள்ளுதல் அல்லது தலையை ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறமாக நகர்த்துதல்.

உங்கள் குழந்தைக்கு போதும் எனும் போதும் உணர்த்தும் அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் மார்பிலிருந்து தலையை எடுத்து கொள்ளுதல், பால் உறிஞ்சும் வேகம் குறைவாக இருக்கும். இது போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு போதும் என்பதை உணர்த்த கூடியவையாகும்.

சில நேரங்களில் அதிகமாக தாய்ப்பால் இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு பசி இல்லை என்றால், நீங்கள் மார்பக பம்ப்களை உபயோகிப்பது சிறந்தது. இது உங்கள் தாய்ப்பாலை வீணாக்காமல், எதிர்கால உபயோகத்திற்காக அதை சேமிக்க முடியும். குறிப்பாக, நீங்கள் வேலைக்கு செல்லும் அம்மா என்றால், மார்பக பம்ப் உங்கள் சிறந்த நண்பராக மாறும். நீங்கள் உங்கள் வேலையில் மும்மரமாக இருந்தாலும், உங்கள் குழந்தையை போதுமான ஊட்டச்சத்துக்களுடன், ஆரோக்கியமாக வைக்க இது உதவுகிறது. மின்சார மார்பக பம்ப்கள் பயன்படுத்த எளிதானது அல்ல, ஆனால் அவை உங்களுக்கு நிறைய நேரத்தை சேமிக்கும்.

தாய்ப்பால் கொடுப்பதில் நன்மைகள் இருக்கிறதா?

1 முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பதாக அறியப்படுகிறது. நோய்களாலும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன. மேலும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

2 தாய்ப்பாலூட்டும் ஒவ்வொரு நாளும் 500 கலோரிகளை நீங்கள் எரிக்கிறீர்கள். அது 8 முதல் 11 கி.மீ. நடைப்பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

3 இது மன அழுத்தம், மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய்க்கான ஆபத்தை குறைகின்றன.

4 இது ப்பார்முலா பால் மற்றும் இதர ஆரோக்கியத்திற்கு பயன்படும் பொருட்களுக்கான செலவை குறைத்து, உங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon