Link copied!
Sign in / Sign up
7
Shares

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

கர்ப்பிணிகள் குழந்தை கருவில் இருக்கும் போதிலிருந்தே அதற்காக பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவில் இருக்கும் குழந்தை நினைவில் இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், காய்கள், பழங்கள் என ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்வார்கள். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சத்துக்களின் பற்றாக் குறைக்கு முடிந்த வரை மாத்திரைகளை தவிர்க்க, தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கு முக்கியத்துவம்  கொடுப்பார்கள். என்ன தான் மாத்திரைகளை தவிர்த்தாலும் பிரசவ காலத்தில் மாத்திரைகள் எடுத்துத் தான் ஆக வேண்டும்.

பிரசவம் என்பது மறுபிறப்பிற்கு ஒப்பானது. சுகப்பிரசவம் ஏற்பட்டதன் வலி ஒரிரு நாளில் சரியாகிவிடும். அதே சமயம், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கு ஒருமாதம் வரை கூட வலி நீடிக்கும். இந்த வலியை மறந்து தூங்குவதற்காகவே தாய்மார்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் தாய்மார்கள் தங்களின் சிசுக்களுக்கு பாலூட்ட வேண்டியுள்ளது. இதனால் சில சமயங்களில் அந்த மாத்திரைகள் குழந்தையை பாதிக்கும்.

வலி நிவாரணி

பிரசவ கால வலிகளிலிருந்து தற்காலிக விடுதலை பெற தாய்மார்களுக்கு கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருந்து அத்தியாவசியத் தேவை. அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ஏற்பட்டிருக்கும் காயம் மிகுந்த வலியை ஏற்படுத்தும். அதற்கான தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுவதே வலிநிவாரணிகள்.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. உண்ணும் உணவின் மூலமும், மருந்துகளின் மூலமும் உடலில் கலக்கும் இரசாயன பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே அதற்கான காரணம். அதனால்தான் பிரசவகால பத்தியம் கூட தாய்மார்கள் பின்பற்றுகிறார்கள்.

குழந்தையை பாதிக்கும்

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது. தாய்மார்கள் தங்கள் வலியைப் போக்க அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாய்ந்து உயிரையும் பறித்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பாலூட்டும் அன்னையர்கள் தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை ஆரோக்கியமான உணவும், போதுமான ஓய்வும் எடுத்துக் கொண்டு மாத்திரைகளை தவிர்ப்பதன் மூலம் குழந்தைகளை ஆபத்திலிருந்து காப்பாற்றலாம்.

வலி நிவாரணிகள் உங்களை வலியிலிருந்து விடுவித்தாலும், நீங்கள் தவம் போல் பத்து மாதம் வயிற்றில் சுமந்து, கையில் வைத்திருக்கும் உங்கள் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு அதிக வலி ஏற்படும் போது மட்டும் மாத்திரைகளை எடுத்து கொள்ளுங்கள். முடிந்த வரை தேவையற்ற மருந்து மற்றும் மாத்திரைகளை தவிர்த்து குழந்தையின் ஆரோக்கித்தை பேணுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon