Link copied!
Sign in / Sign up
13
Shares

குழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு, ஒரு குழந்தைக்கு எப்படி குளிப்பாட்ட வேண்டும், பாலூட்ட வேண்டும், தூங்க வைக்க வேண்டும், உடல்நிலை சரியில்லாத போது எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என பல விஷயங்களில் பலர் அறிவுரை சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் 100% உண்மை தானா என்று நமக்கு  தெரியாது. 

நோய்த்தொற்றுகள் அல்லது நோய்களைத் தடுக்க உங்கள் குழந்தைகளை ஒழுங்காக சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். சந்தையில் நிறைய பொருட்கள் விற்றாலும், பெற்றோராகிய உங்களது கடமை சரியான பொருட்களை தேர்ந்தேடுப்பதே ஆகும். இங்கே, நீங்கள் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறித்த சில பரிந்துரைகளை பார்க்கலாம்.

1 டயப்பர் மாற்றுதல்

முதலில் டயப்பர் மாற்றுதல் சற்றே கடினமான வேலையாக இருந்தாலும் போக போக இது பழகி விடும். பெற்றோர்கள் ஒவ்வொரு 45-60 நிமிடங்களுக்கு ஒரு முறை டயப்பர் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஆமாம் எனில், பழைய டயப்பரை கழற்றிவிட்டு குழந்தையின் பின்புறம் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பருத்தி துணி மற்றும் வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். ஈரம் நன்றாக உலர்ந்ததும், புதிய டயப்பரை போட வேண்டும்.

2 மூக்கு

பெற்றோர் தங்கள் குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வதற்கு, குழந்தை நாசி உறிஞ்சும் பம்ப் பயன்படுத்தலாம். பம்பின் நடுப்பகுதியில் சிறிது அழுத்தி காற்றை வெளியேற்றிவிட்டு, குழந்தையின் மூக்கினுள் வைக்கவும். மூக்கின் வெளிப்புறமாக வைப்பது சிறந்தது. உள்ளே புகுத்தினால், குழந்தையின் மூக்கின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பம்பின் நடுப்பகுதியில் கொடுத்திருக்கும் அழுத்தத்தை விட்டுவிட்டால் அது சளியை உறிஞ்சும். அதை ஒரு மென்மையான காகிதத்தை கொண்டு சுத்தம் செய்யலாம். மேலும், ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் பம்பை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

3 காது

குழந்தைகளை குளிப்பாட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த நேரத்தில் காதுகளில் தண்ணீர் ஊற்றி விடுவோம். இது சகஜமான ஒன்று. ஆனால், காதுகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற பட்ஸை பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் குழந்தையின் காதுகளை பாதிக்க கூடும். அதற்கு பதிலாக குழந்தையின் தலையை இருபுறமாக மென்மையாக திருப்பவும். இதனால், தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு, சுத்தமான, மென்மையான பருத்தியில் செய்யப்பட்ட துண்டை பயன்படுத்தி வெளிப்புற காதை சுத்தம் செய்யலாம்.

4 நாக்கு

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய பிரஸோ அல்லது டங் கிளீனரோ பயன்படுத்த கூடாது. இவையெல்லம் அவர்களுக்கு கடினமாக இருக்கும். அதற்கு பதிலாக ஒரு மென்மையான துணியை பயன்படுத்தலாம். உங்கள் கைகளை சுத்தமாக கழுவி விட்டு, ஒரு சுத்தமான பருத்தி துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து அவர்களின் நாக்கையும் ஈறுகளையும் மென்மையாக துடைத்தெடுங்கள்.

5 நகம்

ஒவ்வொரு 5-7 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் குழந்தையின் நகங்களை கத்திரிகோல் வைத்தோ அல்லது நகம் வெட்டும் கருவி வைத்தோ வெட்ட வேண்டும். குழந்தை தூங்கி கொண்டிருக்கும் போது இதை செய்வது மிகவும் எளிது. நகம் வெட்டி முடித்ததும் கூரான நகங்களின் முனைகளை மென்மையாக்க வேண்டும். நகங்களில் கரை அல்லது அழுக்கு இருந்தால் அதை மென்மையான பிரஷ் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

6 தொப்புள்

ஒரு புதிய பருத்தி துணியை எடுத்துக்கொண்டு அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும். இதை வைத்து, தொப்புள் கொடியை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்யவும். பிறகு அந்த இடம் உலரும் வரை தொப்புள் கொடியை பிடித்திருக்க வேண்டும். தொப்புள் கொடி விழுகின்ற வரையில் அதை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon