Link copied!
Sign in / Sign up
2
Shares

பிஹாரி அம்மாக்கள் மட்டும் செய்யக்கூடிய 5 அற்புதமான விஷயங்கள்

அமைதியான சுபாவத்திலிருந்து, நகைகள் மேல் அளப்பரிய ஆசை வைத்திருப்பார்கள் பிஹாரி அம்மாக்கள். அவர்களை பற்றி சில விஷயங்களை பார்க்கலாம்.

1 மிகவும் அமைதியானவர்கள்

பிஹாரி அம்மாக்கள் மிகவும் அமைதியானவர்கள். அவர்கள் கோபப்படும் வேளையிலும் கண்ணியத்துடன் பேசுவார்கள். நீங்கள் வாயை மூடுங்கள் என்பதையே அமைதியாக தான் சொல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

2 ஊறுகாய் பிரியை

ஒரு பிஹாரி அம்மா ஒரு போதும் தனது வீட்டில் ஊறுகாய் தீர்ந்து போவதை அனுமதிக்க மாட்டார். பிஹாரி அம்மாக்களுக்கு வீட்டில் செய்த மாங்காய் ஊறுகாய், மசாலாக்கள், சட்னி, இறைச்சி உணவுகள் மிகவும் பிடிக்கும்.

3 நகைகள்

பெண்களுக்கு நகைகள் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பிஹாரி விதவிதமான தனித்துவமிக்க நகைகளை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பஞ்ச்லரி, சட்டரி, சிக்ரி, டில்ரி, ஷாரா, ஹன்சுளி, கமர்பந் ஆகிய பாரம்பரியம் மிக்க நகைகளை சேகரிப்பார்கள். இந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் யாவும் தனித்துவமான மற்றும் சிக்கலான கட்டமைப்பை கொண்டவை.

4 புடவைகள்

பிஹாரி அம்மாக்கள் புடவை பிரியர்களுக்கு கூட. பொதுவாக, ஒரு பிஹாரி அம்மாவின் பீரோவில், வித விதமான புடைவைகள், வெவ்வேறு நிறங்களில், உடுத்த வேண்டிய நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு அடுக்கப்பட்டிருக்கும். பிஹாரி உடைக்கு முன்மாதிரியாக இன்றும் புடவைகளே இருக்கின்றனர். துஸ்ஸார் பட்டு புடவைகள் சாதாரண நிகழ்வுகளுக்கும், அதிக வேலைப்பாடு கொண்ட புடவைகள் திருமண நிகழ்வுகளுக்கும் உடுத்திக்கொள்வார்கள்.

5 உணவு

பிஹாரி அம்மாக்களுக்கு பல வகையான உணவுகள் மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பிஹாரி தோழிகள் இருந்தால், கண்டிப்பாக லட்டு, லிட்டி சோகா, தால்-புரி, குஜ்ஜியாஸ், கஜஜா, குர்மா மற்றும் தெகுவா போன்ற உணவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார்கள். அதிலும், ஹோலி பண்டிகையின் போது செய்யப்படும் பாங் மற்றும் தயிர் வடைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon