Link copied!
Sign in / Sign up
109
Shares

ஆண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்

குழந்தைகள் கருவில் இருக்கும் போதே, ஆண் மற்றும் பெண் பாலினத்திற்கான பெயர்களை சேகரிக்க துவங்கி விடுகிறார்கள். குழந்தை பிறந்த உடன் பெற்றோருடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் சேர்ந்து விடுகிறார்கள். எவ்வளவு பெயர்களை பார்த்தாலும் திருப்தி அடைவதில்லை இவர்கள். குழந்தைகளுக்கு அழகிய மற்றும் சிறந்த பெயர்களை தேடுகிறார்கள். குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் அர்த்தத்துடன் இருந்தால் எவ்வளவு அருமையான ஒன்று. இங்கு ஆண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்களை பார்க்கலாம்.

1 ஆரவ்

இது ஆண் குழந்தைகளுக்கான பிரபலமான பெயர். இதன் பொருள் அமைதியானவன் மற்றும் அறிவானவன் என்பதாகும். இந்த பெயர் மிகவும் நவீனமாகவும், அழகான அர்த்தத்துடனும் இருப்பதால் பெற்றோர்களால் தங்கள் குழந்தைக்கு விரும்பி தேர்ந்தெடுக்கப்படுகிறது. 

2 விவான்

இதற்கு சூரியனின் முதல் ஒளி என்பது பொருள். அது மட்டுமின்றி எண்ணிலாப் பெயர் கொண்ட கிருஷ்ணா பரமாத்மாவின் பெயர்களுள் ஒன்று. இது அழகிய உச்சரிப்புடன் தனித்தன்மை பெற்றிருக்கிறது.  

3 முஹம்மது

இது பல வடிவங்களில் எழுதப்படுகிறது மற்றும் பெற்றோர்களால் தான் குழந்தைக்குச் சுட்டப்படுகிறது. பரிசளிப்பது என்பது இதன் பொருள். மிகவும் முஸ்லீம் பெற்றோர்களால் வைக்கப்படும் பெயர்களுள் ஒன்று.

4 அதர்வ்

தங்களின் குழந்தைக்கு நவீனமாகவும், தெய்வீகமாகவும் பெயர் சூட்ட எனும் பெற்றோர்க்கு இது சிறந்த பெயர். அதர்வ் என்பது வேதங்களை முதல் வேதம் மற்றும் விநாயகரின் மற்றோர் பெயர் ஆகும்.

5 ருத்ரன்

ருத்ர என்பது சிவ பெருமானின் புராணப் பெயர்களில் ஒன்று. இதற்கு வலிகளை நீக்குபவன் என்று பொருள். இது இந்தியா பெற்றோர்களால் மிகவும் விரும்பி வைக்கப்படும் பிரபலமான பெயர்களுள் ஒன்று

6 விஹான்

இது சமஸ்கிருத வார்த்தையாகும். இதன் பொருள் விடியல் என்பதாகும். ஒரு புதிய மற்றும் பிரபலமான பெயர்.

7 தன்வீர்

தன்வீர் என்றால் துணிச்சலான மற்றும் பலம் பொருத்திய உடல்வாகு கொண்டவர்கள் என்று அர்த்தம். இது எப்போதும் யாராலும் மறக்க முடியாத ஒரு பெயராக இருக்கும்.

8 யாதவ்

யாதவ் என்பது கிருஷ்ணரை குறிக்கும் இன்னொரு பெயராகும். இது கடவுள் பெயராகவும், நவ நாகரீக பெயரவும் இருப்பதால் உங்கள் குழந்தைக்கு வைக்க சிறந்த பெயர்.

9 ஹர்ஷித்

இதன் பொருள் மகிழ்ச்சி என்பதாகும். உங்கள் குழந்தை மகிழ்ச்சிக்கு குறைவின்றி வாழ இந்த பெயர் பெரும்பான்மையான பெற்றோர்களால் தேர்ந்தெடுக்க படுகிறது.

10 யாஷில்

இது வெற்றியை குறிக்கும் பெயராகும். வித்தியாசமாக இருப்பதால் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

ஒருவரின் அடையாளமாக விளங்கும் பெயரை குழந்தைகளுக்கு தேர்வு செய்யும் பொழுதே அர்த்தம் உள்ளதாக தேர்வுசெய்து அவர்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோமாக!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon