Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளின் வயிற்று வலியை சரி செய்ய உதவும் 9 தந்திரங்கள்

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் கடமையாகிறது. இது உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவு கூறக் கூடிய தருணம். நீங்கள் பெற்றோராகி இருக்கும் தருணத்தில் நீங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தாலும், உங்கள் சிறிய குழந்தையால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. அவர்கள் பசியை உணரும் போதும், உற்சாகமாக இருக்க வேண்டும் என உணரும் போதும், அணைத்து கொள்ள வேண்டும் என நினைக்கும் போதும், அவர்களை சுற்றி ஆட்கள் இருக்கும் போதும், மலம் அல்லது சிறுநீர் கழித்துவிட்டாலோ அவர்களின் அழுகை மூலம் நம்மை தொடர்பு கொள்வார்கள்.

(பொறுப்பு : சிறந்த அன்னை கீதாஞ்சலி)

வயிற்று வலி என்றால் என்ன?

குழந்தைகள் மத்தியில் ஏற்படக் கூடிய மற்றும் பெற்றோரிடம் மிகவும் பொதுவான அனுபவத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக வயிற்று வலி இருக்கிறது. வயிற்று வலியால் குழந்தைகள் அழும் போது, குழந்தையை அமைதியாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பெற்றோருக்கு முற்றிலும் குழம்பிப்போய்விடும். மருத்துவ ரீதியாக, குழந்தையின் இரைப்பை மற்றும் குடல்பகுதியில் ஏற்படும் கோளாறே குழந்தையின் வயிற்று வலிக்கு காரணமாகிறது. தாய்ப்பாலூட்டும் தாய் சாப்பிடும் உணவை பொறுத்தே குழந்தையின் உடலில் வலிகள் ஏற்படுகிறது. சில நேரத்தில் தாய்ப்பாலூட்டும் தாய் உட்கொள்ளும் உணவுகளால் மட்டுமின்றி ஃபார்முலா உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டு, வயிற்று வலியை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் மூன்று வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

வயிற்று வலிக்கான அறிகுறிகள்

எரிச்சலூட்டும் தன்மை, சோர்வு மற்றும் அடிவயிற்று வலியால் குழந்தைகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் மணி கணக்கில் அழுவது போன்றவை வயிற்று வலிக்கான அறிகுறிகளாகும்.

குழந்தையின் வலியை சரி செய்ய முயற்சித்து பரிசோதிக்கப்பட்ட வழிகள்

குழந்தை அழுதாலே அது பயத்தை ஏற்படுத்துவதோடு, குடும்பத்தில் உள்ளவர்களின் தூக்கமும் போய்விடும். அதோடு வயிற்று வலியும் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான், குழந்தையோடு இருப்பவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இங்கு குழந்தையின் வயிற்று வலியின் போது அமைதிப்படுத்தும் வழிகளை பார்க்கலாம்.

1. கங்காருவை நினைவில் கொள்ளுங்கள், அது எளிதான வழி

ஆம், நீங்கள் படித்தது சரி தான். உங்கள் குழந்தையை கங்காருவை போல் அணைத்துக் கொண்டு வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியிலோ நடைப்பயிற்சி செய்யுங்கள். குழந்தையை உங்கள் பக்கமாக நோக்கியோ அல்லது வெளி பக்கமாகவோ குழந்தையின் விருப்பப்படி பிடித்து கொண்டு நடங்கள்.

2. ராக் ஸ்டாராக மாறுங்கள்

இதை பார்த்ததும் முடிவிற்கு வந்து விட வேண்டாம். இதற்கு அர்த்தம் குழந்தையை உட்கார வைத்து உருட்டி உலாத்த ஒன்றை தேர்வு செய்யவும். அது குழந்தையை உட்கார வைத்து நகர்த்த கூடிய கார் அல்லது ஸ்ட்ரோலராக இருக்கலாம். நிலையான இயக்கம் குழந்தையின் வலியை மென்மையாக்க உதவுகிறது. அதே போல் இந்த அதிர்வுகளும் நிச்சயமாக உதவுகின்றன.

3. சில சப்தங்களை உருவாக்குங்கள்

உங்கள் தடையை காற்றில் பறக்கவிட்டு, குழந்தையின் கவனத்தை திசைதிருப்பக் கூடிய படி கொஞ்சும் விதமாக சில பாடல்களை பாடுங்கள். நீங்கள் இந்தியாவில் இருந்தால் உங்கள் பயத்தை காற்றில் விட்டுவிடுங்கள், பக்கத்து வீட்டுகாரர்களை பயமுறுத்தாதபடி பாடுங்கள். குழந்தை உங்கள் பாடலை விரும்பினால், அது உங்களது அதிர்ஷ்டம்.

4. குளிக்க வைப்பது

தண்ணீரை மென்மையாக சூடேற்றி துணியை அதில் நனைத்து குழந்தையின் வயிற்றில் வைத்து எடுக்கவும் அல்லது குழந்தையை குளிக்க வைக்கவும்.

5. மசாஜ் செய்யுங்கள்

குழந்தையின் வயிற்றில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

6. வயிற்று வலிக்கான நிலையை முயற்சிக்கவும்

உங்கள் முன்னங்கையில் உடலும், உள்ளங்கையில் தலையும் இருக்கும் படி குழந்தையை படுக்க வைக்கவும். பின், இரண்டு நிமிடத்திற்கு கையை மெதுவாகவும் சாய்வாகவும் அசைக்கவும்.

7. சுற்றி போர்த்தி விடுதல்

குழந்தை பிறந்த உடன் உங்களிடம் எப்படி துணியால் சுற்றி கொடுத்தார்களோ, அதே போல் குழந்தையின் உடலை துணியால் சுற்றவும். இது குழந்தையின் வலியை குறைத்து, அவர்களை அமைதிபடுத்த உதவும்.

8. வெளிச்சம் மற்றும் சத்தங்களை குறைத்தல்

குழந்தைக்கு பிடித்தமான இசையை போடுவது நல்ல பலனை தந்தாலும், மோசமான மற்றும் இரைச்சலுடன் கூடிய இசை ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, தொந்தரவு செய்ய கூடிய சத்தத்தை நிறுத்தவும் மற்றும் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளுக்கு பதிலாக குறைவான வெளிச்சம் தருபவற்றை உபயோகிக்க வேண்டும்.

9. சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி

நீங்கள் நினைப்பது தவறு. குழந்தையின் காலை கைகளில் பிடித்து மென்மையாக சைக்கிள் ஓட்டுவது போன்று அசைக்கவும். இது போல் செய்வது வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றி, அதனால் ஏற்படும் வலியை சரி செய்ய உதவும்.

ஆமாம், அது சொல்வதற்கு நிறைய இருந்தது ஆனால் வயிற்று வலியை சமாளிக்க, எந்த ஆலோசனையும் துல்லியமான ஆலோசனையாக இருக்காது. குழந்தைகளுக்கு வலி ஏற்படும் போது, பெற்றோர் அமைதியாக செயல்பட வேண்டியது அவசியம். தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் மற்றும் ப்ரோபையோட்டிக்களை எடுத்து கொள்ள வேண்டும். இவற்றை முயற்சித்தால் குழந்தை வலிகளை மறந்து தூங்கிவிடும். பின், பெற்றோரும் அமைதியாக தூங்கலாம்.   

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon