Link copied!
Sign in / Sign up
1
Shares

9 மாத்திரைகளின் நன்மைகள்..!

கர்ப்ப காலத்தில், பெண்கள் பலவித மாற்றங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. உடற்செயலியல் சார்ந்த மாற்றங்களும், மனம் சார்ந்த மாற்றங்களும் பெண்களை வாழ்வின் உச்சகட்ட வேதனை, வலி, சோதனைகளை அடைய செய்கின்றன. இந்த மாற்றங்களால், பெண்கள் அடையும் வேதனைகளை கட்டுக்குள் வைக்க சில மருந்து மாத்திரைகள் உதவுகின்றன…! அவற்றைப் பற்றி, இந்த பதிப்பில் படித்தறியலாம்…

தீவிர அறிகுறிகள்..!

கர்ப்பகாலத்தில் அனைவரும் அறிந்த அறிகுறிகளான வாந்தி, மயக்கம், தலை சுற்றல், பலவீனம் இவற்றோடு, சில தீவிர அறிகுறிகளும் ஏற்படுகின்றன. அத்தீவிர அறிகுறிகளாவன: இரத்த சோகை, மூக்கடைப்பு, மனஅழுத்தம், உடல் வறட்சி, பதற்றம், இரத்த வெள்ளையணுக்களின் எண்னிக்கை குறைவு, குறைந்த பிளாஸ்மா, கண்கள் மற்றும் வாய் வறண்டு போதல்.

இந்த அறிகுறிகள் எல்லை மீறினால், அது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி, உயிருக்கு அபாயமாக மாறிவிடும்.. இவற்றைக் கட்டுக்குள் வைக்க உதவும் மாத்திரைகள் பற்றி அறியலாம்..

“All 9 Tablet”

மேற்கூறிய அறிகுறிகளை கட்டுப்படுத்த, மருத்துவர்கள் “All 9 Tablet” என்பதனை பரிந்துரைப்பர். இந்த மாத்திரைகள், Methylcobalamin, L-Methyl Folate and Pyridoxal 5-Phosphate-இவ்வகை உப்புக்களை கொண்டுள்ளன. இந்த உப்புக்கள் மற்றும் மாத்திரையில் அடங்கியுள்ள பிற சத்துக்கள், கர்ப்பகால அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இவற்றை கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனையின் படி, தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது.

இம்மாத்திரைகள் தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் சேயின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. சேயின் தோல், உடல், மூளை வளர்ச்சிகளில் இம்மாத்திரைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

பக்க விளைவுகள் & முன்னெச்சரிக்கைகள்

ஒவ்வொருவரும் வித விதமான உடலமைப்பு கொண்டவர்கள். சிலருக்கு இம்மாத்திரைகள் ஒத்துக்கொள்ளலாம்; சிலருக்கோ வாந்தி, பேதி, வயிற்று வலி, குடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்..! மேலும் சில சமயங்களில், இது குழந்தையையும் கூட பாதிக்கலாம்.

ஆகையால், மாத்திரைகளை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது தேவையற்ற பக்கவிளைவுகளை தவிர்க்க உதவும். எப்பொழுதும், எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது சேதங்களை குறைக்கும்..! வருமுன் காப்பது சிறந்ததல்லவா, நண்பர்களே..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon