Link copied!
Sign in / Sign up
4
Shares

9-12 மாத குழந்தைகளுக்கான உணவுகள் - காணொளி வடிவில்..!

பெற்றோர்களே! 10 மாதம் தவமிருந்து, கனவிலும் நனவிலும் குழந்தையின் நினைவாகவே வாழ்ந்து, குழந்தைக்கான தேவையை பற்றி மட்டுமே யோசித்து வந்த தாங்கள், தற்பொழுது குழந்தை பிறந்தவுடன் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு, கடைகளில் விற்கும் ரெடிமேட் உணவுகளையே குழந்தைக்கு அளிக்க முன்வருகிறீர். இதற்கு என்ன காரணம்? உணவு செய்வதில் சோம்பேறித்தனமா? அல்லது உணவு செய்யத் தெரியாதது காரணமா? இல்லையேல், கடைகளில் இருக்கும் காட்சிப் பொருட்களின் மீதான அபார நம்பிக்கையா?

இந்த காரணங்களுள் எதுவாயினும், நீங்கள் அவற்றை சரி செய்து, வீட்டில் தயாரித்த உணவுகளை குழந்தைக்கு அளிக்க முயல வேண்டும். ஏனெனில் வீட்டில், சுத்தமான முறையில், சுகாதாரமாக தாயின் கரங்களால் சமைக்கப்பட்ட உணவு, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அதிக நன்மை பயக்கும். 

நீங்கள் கடைகளில் விற்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கி அளிக்கையில், அது குழந்தைக்கு ஆரோக்கியம் அளிப்பது போல், தோன்றலாம்; ஆனால், உண்மையில் அதில் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களால், குழந்தைகளுக்கு தற்சமயமோ அல்லது பின்னாளிலோ ஏதேனும் குறை நேரலாம். ஆகையால், அதற்கு இடங்கொடாமல், குழந்தைகளின் உணவு மற்றும் இதர விஷயங்களில் சிந்தித்து செயலாற்றுங்கள்..!

குழந்தைகளுக்கான உணவுகளை மருத்துவ ஆலோசனையுடன், வீட்டில் தயாரித்து, அவர்களுக்கு வழங்குவது சாலச் சிறந்தது. அப்படி 9 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..! காணொளியைக் கண்டும் அறிவோம்..!

Video Credits: Tasty Junior Facebook Page

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon