Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பகாலத்தில் எலும்புகளை வலுப்படுத்த உதவும் 8 வழிகள்

கர்ப்பகாலத்தின் போது மனம், உடல் மற்றும் சமூக ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான மொத்த சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியம். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தின் போதும், பிரவத்திற்கு பின்னரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், நிறைய உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

கர்ப்பிணி பெண்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் அதிகம் உள்ளது அதில் முக்கியமான ஒன்று ஆஸ்டியோபோரோசிஸ். உணவு, உடற்பயிற்சி மற்றும் சோதனை போன்ற அனைத்து அம்சங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக கர்ப்பகாலத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் அதற்கான வழிகாட்டியை கொண்டுவந்துள்ளோம்.

1. கால்சியம்

எலும்புகளின் ஆரோக்கியம் எனும்போது கால்சியம் அதில் மிகவும் முக்கியமானது. கர்ப்பகாலத்தில் மட்டுமில்லாமல் பிரசவத்திற்கு பிறகும் எலும்புகளின் வலுவிற்கு கால்சியம் அவசியமாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுவடைய செய்யும். பால், பனீர், சீஸ், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.

2. வைட்டமின் டி

வைட்டமின் டி உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது, எனவே உங்கள் குழந்தையின் எலும்புகளையும் வலுவடைய செய்ய உதவும். ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியில் குறைந்தபட்சம் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சூரிய ஒளி மட்டுமில்லாமல் வைட்டமின் டி உள்ள உணவுப்பொருட்களும் நிறைய உள்ளது. அவை டூனா, சால்மன், ஆரஞ்சு சாறு, முட்டை மஞ்சள், சோயா மற்றும் தானியங்களாகும்.

3. உடற்பயிற்சிகள்

கர்ப்பகாலத்தின் போது எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் பெண்கள் கைவிட்டுவிட வேண்டும் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். ஆனால் இது முற்றிலும் தவறாகும். யோகாவுடன் இணைந்த சில உடற்பயிற்சிகள் அம்மாவின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகரிக்கும். உடற்பயிற்சிகள் உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவடைய செய்யும். அது மட்டுமின்றி யோகா உங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் புத்துணர்ச்சியடைய செய்யும்.

4. குடிக்காதீர்கள்

குடிப்பது உங்கள் உடல் உறுப்புகளை வெகுவாக பாதிக்கும் குறிப்பாக கல்லீரலை அதிகம் பாதிக்கும். மேலும் இது மறைமுகமாக பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆல்கஹால் வைட்டமின் டி மூலம் கிடைக்கும் சத்துக்களை தடுக்கிறது, இதனால் எலும்புகள் பலவீனம் அடைகின்றன.

5. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

புகை பிடித்தல் உங்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை தடுக்கிறது. இதனால் உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது, எனவே எலும்புகள் வலுவிழக்கும்.

6. காஃபின் எடுத்துக்கொள்ளுங்கள்

காஃபின் உடலுக்கு தேவையான சில சத்துக்களை கொண்டுள்ளது, ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு காஃபின் கால்சியம் உட்கொள்ளும் திறனை பாதிக்கக்கூடும். ஆய்வுகளின்படி தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்கள் காபி குடிக்காதவர்களை விட அதிகளவு கால்சியத்தை பெறுகின்றனர். எனவே உங்கள் காபியை மகிழ்ச்சியாக அருந்துங்கள் ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டும்.

7. பொட்டாசியம் பம்ப்

பொட்டாசியம் எலும்புகளை உருவாக்கவோ அல்லது வலுப்படுத்தவோ அவசியமானது அல்ல. அதற்கு பதிலாக, கழிவுகளை அகற்ற நரம்புகள் மற்றும் தசைகளுக்கு உதவுகின்றது. உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்ற கூடிய அமிலங்களை நடுநிலைப்படுத்துகிறது, இதனால் எலும்புகள் வலுவடையும். வைட்டமின் கே இதற்கு உதவ முடியும், ப்ரோக்கோலி, செங்கீரை மற்றும் மற்ற கீரைகளில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.

8. உங்கள் குடும்ப மருத்துவ வரலாற்றை அறியவும்

கர்ப்ப காலத்திலோ அல்லது பிரசவ நேரத்திலோ உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை தெரிந்து வைத்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என்று அறிவீர்கள். சில நோய்கள் அல்லது குறைபாடுகள் (இது எலும்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது இருக்கலாம்) பரம்பரை பரம்பரையாக தொடரலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில், மருத்துவ உதவி பெற மற்றும் சிக்கல்களை தடுக்க உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon