Link copied!
Sign in / Sign up
185
Shares

8 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..

8 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் மாற்றங்கள் நிகழும்; இத்தனை நாள் பாலை மாட்டும் விரும்பிய குழந்தை, திட உணவுகளை சாப்பிட முயலும். உங்கள் கையிலிருந்து, உணவினை பறித்து உண்ணும், குழந்தையே உணவுகளைக் கையில் எடுக்கும். இது போன்ற சில மாற்றங்கள் 8 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..!!  

திங்கள்

என்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த கேரட்டைக் கொடுக்கலாம். மதியம், பயத்தம் பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், மசித்த கேரட் அல்லது மசித்த உருளைக் கிழங்கை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

செவ்வாய்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கொடுக்கலாம். மதியம், காய்கறிகளையும் பருப்பையும் கொண்டு தயாரித்த சூப்பையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், மசித்த காய்கறிகளை வெண்ணெய் சேர்த்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

புதன்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த முட்டையைக் கொடுக்கலாம். மதியம், அரிசி மற்றும் பருப்பில் செய்த கஞ்சியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், கோதுமையைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

வியாழன்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது நசுக்கப்பட்ட பன்னீரைக் கொடுக்கலாம். மதியம், மசித்த கொண்டைக்கடலை மற்றும் காய்கறிகளையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், ஆப்பிளைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

வெள்ளி

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், வறுக்கப்பட்ட பிரட்டில், வெண்ணெய் சேர்த்து, மசித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மதியம், காய்கறிகள் சேர்த்த பயத்தம் பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சியைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

சனி

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், ஆப்பிள் அல்லது கேரட் சூப்பைக் கொடுக்கலாம். மதியம், ரசம் கலந்த மசித்த சாதத்தையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், மசித்த தோசை அல்லது மசித்த இட்லியைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

ஞாயிறு

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், இனிப்பு கலந்த தயிரைக் கொடுக்கலாம். மதியம் உடைந்த கோதுமையில் செய்த கிச்சடியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், ரவை அல்லது ஆப்பிள் கஞ்சியைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

குழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon