Link copied!
Sign in / Sign up
0
Shares

7 சிறந்த பாலிவுட் நட்சத்திர தந்தைகள்..!

நண்பர்களே! நமக்கு திரையில் காட்சியளித்து, நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் திரை பிரபலங்களில், சிறந்த அன்னைகளும், சிறந்த தந்தைகளும் இருக்கிறார்கள்..! அவர்களில் ஏழு தந்தையரை பற்றியே நாம் பதிப்பில் காணப்போகிறோம்..! பதிப்பிற்குள் செல்லலாமா??

1. ஹிருத்திக் ரோஷன்..

 

உலகின் கவர்ச்சியான ஆடவர்களுள் ஒருவர், சிறந்த நடிகர், இப்படிப்பட்டவர் 2 ஆண் சிங்கங்களுக்குத் தந்தையாவார். ஹ்ரிஹான், ஹ்ரிதான் என்ற இரு மகன்களை கவனித்துக் கொள்வதில் தாயுமானவனாய் விளங்குகிறார், ஹிருத்திக்.. அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது, வேண்டியதை வாங்கி கொடுப்பது என்று மகன்களுக்கான அனைத்து பணிவிடைகளையும் அவரே செய்கிறார், ரோஷன்..

2. அக்ஷய் குமார்..

திரையில் மிகக்கடினமான நபராக தோற்றமளிக்கும் அக்ஷய், தன் குழந்தைகளான ஆரவ் மற்றும் நிதாராவை கவனிப்பதில் அப்படியே எதிர்ப்பதம். மிக மென்மையான மனிதராக, பாசமுள்ள தந்தையாக, குழந்தைகளுக்கு அறம் மற்றும் வாழ்வின் மகத்துவத்தை போதிப்பதையே தன் கடமையாகக் கொண்டவர், அக்ஷய். தன் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளையும் கற்று வளர்த்து வருகிறார்.

3. ஷாருக் கான்..

பாலிவுட்டின் பாஷா, மக்களின் மனம் கவர்ந்த நாயகனான ஷாருக் தன் பிள்ளைகளான, ஆர்யன், சுஹானா, ஆப்ராம் ஆகியோரிடம் ஒரு நண்பனைப்போல் நடந்து கொள்ளும் நல்ல தந்தையாவார். தன் குழந்தைகளிடம் கஷ்ட நஷ்டங்கள் மற்றும் இரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார் ஷாருக்..

4. அபிஷேக் பச்சன்..

குழந்தை வளர்ப்பில் தகப்பனுக்கும் கடமை மற்றும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து மனைவிக்கு உதவி, குழந்தையை கண்ணும் கருத்துமாய் காத்து வரும் நடிகர், நல்ல தந்தை அபிஷேக்.. குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயங்களாக அபிஷேக் 4 விஷயங்களை கருதுகிறார்; அவை, அன்பு, அரவணைப்பு, படிப்பு, புரிதல். இந்த நான்கும் தன் குழந்தை ஆராத்யாவிற்கு கிடைக்கும் வகையில் பேணிக்காத்து வளர்த்து வருகிறார் பச்சன்.

5. அஜய் தேவ்கான்

இவர் எவ்வளவு வேலையாக இருந்தாலும், குழந்தைகளுக்கு என்றவுடன் தன் அத்துணை வேலைகளையும் புறந்தள்ளி விட்டு, அவர்களை கவனித்துக் காக்கும் சிறந்த தந்தை.. குழந்தைகள் தான் இவரின் உலகம்.. அவர்களின் நலமே, இவரின் உயிர்நாடி..

6. ரித்தேஷ் தேஷ்முக்..

நடிகர் ரித்தேஷ் தன் இரண்டு மகன்கள்; ரியல் மற்றும் ரியனின் மீது உயிரையே வைத்திருக்கும் புதுத்தந்தை. தன் குழந்தைகளின் முதல் பிறந்த நாளை வெகு கொண்டாடி மகிழ்ந்தார். தந்தையானபின் வாழ்க்கையின் உண்மையான சந்தோசத்தை அடைந்ததாய் எண்ணி அதிகம் மகிழ்ச்சி கொண்டு, குழந்தைகளை பாசம் காட்டி வளர்க்கிறார், தேஷ்முக்..

7. ஷாகித் கபூர்..

புதுத்தந்தையான, நடிகர் ஷாகித், தன் மகளின் மீது, அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறார். தன் செல்ல மகளை கண்ணின் மணியாய் காத்து வருகிறார், ஷாகித்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon