Link copied!
Sign in / Sign up
425
Shares

7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..!

7 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் மாற்றங்கள் நிகழும்; இந்த காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவுகளை உட்கொள்ள தொடங்கியிருக்கும். உங்கள் கையிலிருந்து, உணவினை பறித்து உண்ணும், குழந்தையே உணவுகளைக் கையில் எடுக்கும். இது போன்ற சில மாற்றங்கள் 7 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..!!  

திங்கள்

என்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

செவ்வாய்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

புதன்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

வியாழன்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக கேழ்வரகில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

வெள்ளி

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக பாசிப்பருப்பு மற்றும் அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

சனி

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பூசணிக்காயை கீர் போன்று செய்து கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

 ஞாயிறு

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த கேரட்டைக் கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.

குழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon