Link copied!
Sign in / Sign up
1
Shares

உடன்பிறந்தவர்களுடன் செய்யும் 7 வேடிக்கையான உரையாடல்கள்

ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் உடன் பிறந்தவர்களுடன் பெரும்பாலும் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அதுவும் சகோதரி என்றால், அந்தரங்க விஷயங்கள் கூட பகிர்ந்து கொள்ளப்படும். இங்கு திருமணத்தின் முன் உடன் பிறந்தவருடன் செய்யும் வேடிக்கையான உரையாடல்கள் பற்றி பார்க்கலாம்.

1. சரியான நபர்

நீங்கள் யார் என்பது உங்கள் சகோதரிக்கு முழுமையாக தெரியும். நீங்கள் விரும்பும் கணவர் எப்படி இருக்க வேண்டுமென அவரிடம்தான் அதிகம் பகிர்ந்திருப்பீர்கள். அவரின் சிரிப்பு, நகைச்சுவை உணர்வு, நம்பிக்கை என நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் அவர்தான் அறிவார். நீங்கள் உங்களுக்கானவரை தேர்ந்தெடுத்தபின் உங்களை உற்சாகப்படுத்துவதும் அவர்தான்.

2. மாமியார் - மருமகள்

கண்டிப்பாக உங்களது சகோதரியுடன் மாமியார்- மருமகள் போல சண்டை போட்டிருப்பீர்கள். மாமியார் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்று கற்பனை செய்து சண்டை போட்டு மகிழ்வீர்கள், இந்த தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

3. பாலி அல்லது பாரிஸ்?

உங்கள் கணவருடன் எங்கே தேனிலவு செல்லவேண்டுமென இருவரும் விவாதிப்பது மிகவும் சுவாரஸ்யமானதாகும். இருவரும் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து, பில்லியன் கணக்கில் பத்திரிகைகளையும், தேனிலவுக்கான அழகான மற்றும் குளிரான இடங்களைப் பற்றியும் உற்சாகமாக விவாதிப்பீர்கள். அதற்கு பிறகு முதல் ஐந்து இடங்களை தேர்ந்தெடுத்தும் அங்கு என்ன செய்வீர்கள் என்பதை பற்றியும் விவாதிப்பீர்கள்.

4. உங்கள் கனவு உடை

ஷாப்பிங் என்று வரும்போது, நீங்கள் முதலில் அழைப்பது உங்கள் சகோதரியைத்தான். நீங்கள் உங்களின் திருமண உடையை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேண்டுமென உங்களின் அனைத்து விருப்பத்தையும் அவர்கள் அறிவார்கள். உடையின் நிறம், டிசைன், அளவு, டிசைனர் என அனைத்தையும் அறிவார்.

5. எத்தனை குழந்தைகள்

இருபது குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு பிடித்த அத்தையாக இருக்க வேண்டுமென வேடிக்கையாக பேசிக்கொள்வீர்கள். அவர்களுக்கு பெயர் வைப்பது அவர்களுக்குள் யார் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் என உரையாடுவது வாடிக்கையாய் இருக்கும்.

6. நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

இறுதியாக, நீங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்துகொள்ள உங்கள் சகோதரி ஒப்புக்கொள்ள வேண்டுமென விரும்புவீர்கள். முதல் நாளில் இருந்தே உங்களுக்கு அவரை பிடிக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள் மற்றும் அவர் பற்றிய வேடிக்கையான உரையாடல்கள் எப்பொழுதும் "அவர் மிகவும் மோசம் இல்லை. எனக்கு சம்மதம்" என்றே முடியும்.

7. நீ இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று தெரியவில்லை?

ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவது ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கும், ஆனால் முதல் நாளில் இருந்தே உங்கள் சகோதரி இல்லாமல் எப்படி வாழ போகிறேன் என்ற கவலையும் இருக்கும். உங்களின் வேடிக்கையான சண்டைகள், அற்புதமான உரையாடல்கள், ஷாப்பிங் பயணங்கள்- அவைதான் உங்களின் உலகமாக இருக்கும். இறுதியில் உங்கள் இதயத்தை நொறுக்க கூடியதாக இருக்கும், உங்கள் சகோதரியுடன் நீங்கள் பகிர்ந்துகொண்ட உணர்வுபூர்வமான தருணங்கள், மதிப்புமிக்கவையாகும். எவ்வாறாயினும் அவர் உங்களுக்காக எந்த நேரத்திலும் இருப்பார் என்பதே உண்மை.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon