Link copied!
Sign in / Sign up
6
Shares

தம்பதியரின் அன்றாட செயல்களை அழகாக காட்டும் 7 உவமைகள்..!

திருமண பந்தத்தில் இருமானதாய் இணைந்து, திருமண வாழ்வில் ஒருமானதாய் வாழும் தம்பதியரை உருவகப்படுத்தும் சிறந்த உவமைகளை இந்த பதிப்பில், கண்டு மகிழலாம்..!

1. துணையின் முகம்

மிகுந்த சோர்வுக்கு பின் நீங்கள் வீட்டுக்கு வரும்போது உன் அன்பான துணையின் அழகிய, புன்னகை முகத்தை பார்க்கும்போது, உங்கள் எல்லா பிரச்சனைகளையும் மறந்து விடும். இது உலகின் சிறந்த உணர்வு!

2. பயத்தை பகிர்ந்துகொள்ளுதல்

உங்கள் துணை உங்களை ஆதரிக்க அவர்களின் அனைத்து பயம் மற்றும் பிரச்சினைகள் ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுடைய பயத்தை வெல்ல உதவும் போது அதுதான் காதல்.

3. சரியில்லாத சரிகள்

அவர்கள் அவர்களின் வேலைகளை சரியாக செய்யாமல் அழகாக சொதப்புவதே உங்களை கவரும். அவர்களின் குறைகள் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது, ஏனெனில் அவர்கள் உங்களுடன் இரண்டற கலந்துவிட்டார்கள்.

4. உங்கள் துணையுடன் உலகை சுற்றி வருதல்

அவர்களுடன் உலகை சுற்றி வருவது அற்புதமான உணர்வு அல்லவா! உங்களை தொந்தரவு செய்ய யாரும் இல்லாத நேரம் இதுதான். நீங்கள் உங்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை ஒன்றாக செலவிட, உலகின் அழகை இருவரும் பார்த்து ஒன்றாக தெரிந்துகொள்ள ஏற்ற நேரம்.

5. முடிவு எடுப்பவர்

ஒரு முடிவை எடுக்க புதிய தந்திரங்களை அவர் முயற்சிக்கிறார். ஆனாலும், அவள் மகிழ்ச்சிக்காக, அவள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், ஏனென்றால் அவள் மகிழ்ச்சியாக இருந்தால்தான், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

6. கண்களில் நட்சத்திரங்கள்

உங்களின் அழகிய துணை அருகிலிருக்கும் நீங்கள் வானத்தை பார்க்கவேண்டுமா!. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மிகவும் தொலைவில் இருக்கிறது ஆனால், உங்கள் துணையின் கண்களில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியையே நீங்கள் வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் துணையின் கண்களை உற்றுப்பார்ப்பதைவிட காதலில் மிகஅழகிய தருணம் இல்லை.

7. ஒளிமயமான எதிர்காலம்

அழகிய தருணம் என்பது இருவரும் அமர்ந்து உங்கள் வருங்காலத்தை பற்றி திட்டமிடுவதும் உங்கள் காதல் எங்கிருந்து தொடங்கியது என்று நினைத்து பார்ப்பதும்தான். பள்ளி அல்லது கல்லூரியில் நீங்கள் எப்படி சந்தித்தீர்கள், உங்கள் வாழ்வின் உயர்வு மற்றும் தாழ்வுகளில் எவ்வாறு ஒற்றுமையாய் இருந்தீர்கள் மற்றும் வரும் நாட்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதெல்லாம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களின் முதுமை பருவத்தில் ஒன்றாய் இருக்கப்போவதை நினைத்து மகிழுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon