Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளை நோய்தொற்றுகளிலிருந்து காக்க உதவும் 6 வழிகள்..!

நண்பர்களுடன் உரையாடும்போது குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய பேச்சுகள் கண்டிப்பாக வரும். சில குழந்தைகள் நோய்வாய்ப்படாமல் இருக்கும்போது உங்கள் குழந்தைக்கு மட்டும் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் வந்துகொண்டே இருக்கலாம். உங்கள் குழந்தையை ஆரோக்கியமாய் வளர்க்கவில்லை என்பது உங்களை கவலையடைய செய்யலாம். குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் சில ரகசியங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. உடற்பயிற்சி

உங்கள் குழந்தைக்கு மருந்துகளோ, ஊசியோ போட வேண்டாமென நீங்கள் நினைத்தால் அதற்கு மாற்றுவழி உடற்பயிற்சி மட்டுமே. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு செல்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. பெரும்பாலும் நீங்களும் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள் நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொள்வது போன்று. இது குழந்தைகளின் நோயெதிர்க்கும் சக்தியை 20-25% அதிகரிக்கிறது.

2. கைகளை சுத்தமாக வைத்திருங்கள்

இது மிகவும் குழந்தைத்தனமாக தெரியலாம் ஆனால் முடிந்தவரை இதனை வீட்டில் செய்ய பழக்குங்கள். உணவு உண்பதற்கு முன்னும், வெளியில் சென்று வந்தாலும் காய் கழுவுவதை கட்டாயமாக்குங்கள். இது வெளியிலிருந்து உடலுக்குள் கிருமிகள் செல்வதை தடுக்கிறது. கைகளை நன்றாக தேய்த்து கழுவுவதை உறுதிசெய்யுங்கள். ஆரோக்கியமான கைகழுவுதல் என்பது 15-20 நொடிகளாகும்.

3. தூக்கம்

உங்கள் குழந்தையின் வயதிற்கு ஏற்றவாறு அவர்கள் சரியான தூக்கத்தை பெற வேண்டும். தூக்கமின்மை என்பது உங்கள் குழந்தை நோய்வாய்ப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அவர்களை தினமும் இரவு படுக்கைக்கு சீக்கிரம் வைப்பது அவர்களின் அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

4. தடுப்பூசி

மீண்டும் தொற்றுநோய்கள் வந்தால் முடிந்தளவு விரைவாக தடுப்பூசி போடுங்கள். இது நோய்களின் வீரியத்தை குறைப்பதோடு உங்கள் குழந்தையை நோயாளியாக மாறாமல் தடுக்கும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அதனால் எளிதில் வைரஸ்கள் குழந்தைகளை தாக்கும். வரும்முன் காப்பதே சிறந்தது.

5. முகத்தை தொடாதீர்கள்

இயற்கையாகவே குழந்தைகள் அமைதியற்றவர்களாக இருக்கிறர்கள். அவர்கள் பார்க்கும் அனைத்தையும் கைகளில் தொடுவது என்பது இயலாத காரியம். ஆனால் அவர்கள் முகத்தை கைகளை கொண்டு மூடுவது நல்லது, ஏனெனில் பெரும்பாலான நோய்த்தொற்றுகள் வாய் மற்றும் மூக்கு மற்றும் காது வழியே நுழைகின்றது. சரியான நேரத்திற்கு கை கழுவுவதுடன், பிரஷ், ஸ்பூன், கோப்பை போன்றவற்றை பகிரவேண்டாமென சொல்லிக்கொடுங்கள்.

6. சரியான உணவுமுறை

உங்கள் குழந்தைக்கு சரியான உணவுகளை மட்டுமே கொடுப்பதில் உறுதியாயிருங்கள். முடிந்தவரை அவை வண்ணமயமாய் இருக்கட்டும். வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுங்கள். வைட்டமின் டி உள்ள தானியங்கள் கொடுப்பது சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகளவு தண்ணீர் மற்றும் தயிர் போன்றவற்றை சாப்பிட வையுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon