Link copied!
Sign in / Sign up
23
Shares

6 முதல் 12 மாதங்களில் குழந்தை வளர்ச்சி

குழந்தை பிறந்து 6 மாதங்கள் முடிவடைந்து விட்டால், அவர்களை சுற்றி இருக்கும் சூழ்நிலையை அவர்கள் உணர துவங்குவார்கள். இப்போது தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை அடையாளம் கண்டு பிடிப்பார்கள். அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள், ஆனால் அவர்கள் இந்த வயதில் தனிமையாய் உணர்வார்கள். அவர்கள் தங்கள் அம்மா அல்லது வேறு பராமரிப்பாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டால் அவர்கள் வருத்தப்படுவார்கள், சோகமாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கிறார்கள்.

அவர்கள் சத்தம் மற்றும் சில செயல்களை சந்தேகிக்கக்கூடியவர்கள். உங்கள் குழந்தையை தொடர்பு கொள்வதற்கும், உங்களைப் புரிந்து கொள்ள செய்வதற்கும் இது சிறந்த வயதாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தையுடன் தொடர்ந்து பேசுவதன் மூலம், அவர்கள் உங்கள் குரலை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

குழந்தைகள் உளற துவங்குவார்கள், சில சத்தங்களை எழுப்புவார்கள். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். இப்போது தான் குழந்தைகளின் தசைகள் வளர்ச்சியடைய துவங்கி இருக்கும். அவர்கள் உட்கார்தல், தவழுதல் மற்றும் எழுந்து நிற்பது போன்றவற்றை செய்வார்கள். சில குழந்தைகள் நடக்க துவங்கி இருப்பார்கள். இங்கு 6 முதல் 12 மாதங்களில் குழந்தைகளின் வளர்ச்சியை பார்க்கலாம்.

1 அறிவாற்றல்

குழந்தைகள் இந்த உலகில் புத்திசாலியாகவும், அனுபவசாலிகளாகவும் மாறி இருப்பார்கள். இப்போது அவர்களின் பராமரிப்பாளரின் கவனத்தை, இவர்கள் பக்கம் திருப்ப சில சத்தங்களை எழுப்ப கற்று கொண்டிருப்பார்கள். மற்றவர்களின் கவனத்தை பெறுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும்.

குழந்தைகள் சிலவற்றை முயற்சித்து, அதிலிருந்து கற்று கொள்கிறார்கள். அவர்கள் புதிது புதிதாக முயற்சிப்பதை விரும்புகிறார்கள். அவர்களை சுற்றி உள்ளவர்கள் புன்னகைக்கும் போதும், சிரிக்கும் போதும் இவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அவர்கள் புதுமைகளால் முற்றிலும் ஆச்சரியப்படுகிறார்கள். அதுபோலவே, அவர்கள் குறுகிய கால நினைவாற்றலைக் கொண்டிருப்பார்கள், அவர்களது நினைவாற்றல் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு ஒரு சிவப்பு வண்ண பந்தை நீங்கள் காட்டினால் அவர்கள் அதை ஆச்சர்யமாக பார்ப்பார்கள். அதே பந்தை சில மணி நேரங்களுக்கு பிறகு காட்டினால், மீண்டும் முதல் முறை பார்ப்பதை போலவே பார்ப்பார்கள்.

2 உணர்ச்சிகள்

அவர்களால் இப்போது எதையும் தெளிவாக பார்க்க முடியும் மற்றும் அவர்களை சுற்றி உள்ள சுற்றுப்புற சூழலை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் சுற்றியுள்ளவர்களை பற்றி மேலும் அறிந்துகொண்டு, அவர்களின் துணையை அனுபவித்து மகிழ்வார்கள். உங்கள் குழந்தைகள் புன்னகை மூலம் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள். நீங்களும் அதே போல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அவர்கள் அன்புடன் பல விதமான முகபாவங்களை ஏற்படுத்துவார்கள். மேலும் அவர்களின் முகம் மற்றும் அவர்களின் சுட்டி தனத்தை கண்ணாடியில் காண விரும்புவார்கள். இது அவர்களின் வேடிக்கையான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.

இப்போது, உங்கள் குழந்தைகள் அதிகம் அழ மாட்டார்கள். அவர்களுக்கு பசிக்கும் போது, தூக்கமாக உணரும் போது அல்லது அவர்களது துணியை ஈரப்படுத்தி இருந்தார்கள் என்றால் அப்போது மட்டுமே அழுவார்கள்.

உங்கள் குழந்தைகள் அவர்களின் சௌகர்ய பகுதியை விட்டு வெளியே போனால், மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் இருப்பார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் மென்மையான பொம்மைகள், பழக்கமான ஆடைகள் அல்லது விருப்பமான போர்வை ஆகியவற்றை வழங்கினால், அமைதியாகவும் சமாதானமாகவும் உணருவார்கள்.

3 இயக்க திறன்

இந்த வயதில் வளர்ச்சி என்பது மிக முக்கியமான அம்சமாகும். உங்கள் குழந்தையின் தசைகள் வளர ஆரம்பித்திருக்கும், அவர்கள் எப்படி உட்கார, தவழ, நிற்க மற்றும் நடக்க என அனைத்தையும் முயற்சித்து கற்றுக் கொள்வார்கள்.

இந்த வயதில் குழந்தைகளால் எதையும் தாங்கி பிடிக்க முடியும். முன்னோக்கி நகர்வதை போல் பின்னோக்கியும் நகர கட்டுற்கொள்வார்கள். அவர்களின் தசைகள் வலுவுடன் இருப்பதே இதற்கு காரணமாகும். அவர்களால் பொருட்களை தூக்கவும், தொட்டுணரவும் முடியும்.

அவர்களின் உடல் தசைகள் வளர்ந்து கொண்டிருப்பதால், அவர்களால் உட்கார்ந்து தலையை எளிதாக கட்டுப்படுத்த முடியும். அவர்களால் அவர்களின் கண் இமைகளை கூட ஒருங்குபடுத்த முடியும்.

இந்த வயதில் அவர்கள் தவழ துவங்கி இருப்பார்கள். இப்போது அவர்களின் இயக்க திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களால் முழு உடலையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்வார்கள். அவர்கள் உடல் வலுவாக மாறி இருக்கும். இப்போது அவர்களை உடலை கட்டுப்படுத்தி நகர துவங்கி இருப்பார்கள்.

4 பேசுதல்

இந்த வயதில், குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் உரையாடல்களைத் தொடங்குகிறார்கள், இது அவர்களின் சமூக நுழைவாயிலாக அமைகிறது.

அவர்களால் சரியாக வார்த்தைகளை கோர்த்து பேச முடியவில்லை என்றாலும், அவர்களின் மழலை பேச்சில் உரையாட துவங்குவார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்து, ஊக்குவிக்கும் போது அவர்கள் விரைவில் பேச கற்றுக் கொள்வார்கள்.

5 குழந்தை உலகம்

அவர்கள் சுற்றுசூழலை நன்கு புரிந்து கொள்வதால், அவர்களுது பொம்மைகளுள் எதையாவது ஒன்றை காணவில்லை என்றாலும், உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் கோவப்படுவார்கள்.

அவர்களால் இப்போது எழுந்து உட்கார முயற்சித்தால், அவர்களது உலகம் இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் வரும். அவர்கள் விரும்பியபடி அவர்களால் இருக்க முடியும்.

அவர்கள் தாத்தா பாட்டி அல்லது பிற குழந்தை நண்பர்களிடம் நல்ல பிணைப்பை உருவாக்கி இணைந்து விடுகிறார்கள். எனவே நீ அவர்களின் பக்கத்தில் இருந்தால் மட்டுமே அவர்களின் பாசம் உங்களுக்கு கிடைக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon