Link copied!
Sign in / Sign up
13
Shares

6 முதல் 12 மாத குழந்தைக்கு காய்ச்சலின் போது கொடுக்க வேண்டிய உணவுகள்

குழந்தைகளுக்கு இப்போது தான் நோய் எதிர்ப்பு மண்டலமும், செரிமான மண்டலமும் வளர்ச்சி அடைய துவங்கி இருக்கும். அவர்கள் எளிதில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு நோய் தொற்றால் காய்ச்சல் சளி ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். ஆனால், அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு மற்றும் நீரிலும் கவனம் செலுத்த வேண்டும். இங்கு குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது கொடுக்க  வேண்டிய உணவுகளை பார்க்கலாம்.

1 தாய்ப்பால்

தாய்ப்பால் எப்போதும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த உணவு. இதில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்திருக்கிறது. குழந்தைக்கு தேவையான அளவு பால் புகட்ட வேண்டியது அவசியம்.

2 பருப்பு கிச்சடி

குழந்தை ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தால், திட உணவை அறிமுகம் செய்திருப்பீர்கள். பாசிப்பருப்பு கிச்சடி குழந்தைக்கு போதுமான புரதத்தை வழங்குகிறது. இது ஜீரணிக்க எளிதானது மட்டுமல்ல, ஒரு சீரான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. உங்கள் குழந்தைக்கு மிதமான சூட்டில் கிச்சடி கொடுங்கள். குழந்தையை சாப்பிடுவதற்கு கொடுக்கும் வழக்கமான அளவுக்கு கொடுக்க வேண்டாம். குழந்தை போதும் என்றால் விட்டுவிடுங்கள்.

3 மசிக்கப்பட்ட தயிர் சாதம்

குழந்தையின் 11 மாதங்களுக்கு பிறகு தயிர் சாதம் கொடுக்கலாம். அது குளிச்சியாக இருக்கும் போது கொடுக்க கூடாது. சாதத்தை தயிருடன் சேர்த்து நன்கு மசித்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு எளிதில் செரிக்க கூடியது.

4 சூப்

இது குழந்தையின் சோர்வை நீக்குவதோடு, தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. காலநிலைகளில் கிடைக்க கூடிய காய்கறிகளை நறுக்கி போதுமான தண்ணிர் சேர்த்து வேக விடவும். இதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு காய்கள் வெந்ததும் மசித்து மிதமான சூட்டில் குழந்தைக்கு கொடுக்கலாம்.

5 கோதுமை கூழ்

குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது கோதுமை கூழ் கொடுப்பது சிறந்தது. உடைக்கப்பட்ட கோதுமையை நன்கு சுத்தப்படுத்தி, கழுவி 15 நிமிடம் ஊறவிடவும். மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக விடவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குழந்தை கொடுக்கவும்.

6 பழங்கள் அல்லது காய்கள்

வாழைப்பழம், வேகவைத்து மசிக்கப்பட்ட ஆப்பிள், பச்சை பட்டாணி, கேரட் ஆகியவற்றை காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

7 அரிசி கஞ்சி

குழந்தை சாப்பிட விரும்பினால் அவர்களுக்கு அரிசி கஞ்சி கொடுக்கலாம். இது காய்ச்சலுக்கு சிறந்த உணவுவாக இருப்பதோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்கும்.

8 மஞ்சள் மற்றும் ஓமம்

குழந்தையின் உணவு தயாரிக்கும் போது இந்த பொருட்களை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த அனைத்து பொருட்களும் இயற்கையில் ஆண்டிபயாடிக் மற்றும் தொற்றுக்கு எதிராகவும், வெப்பநிலையை குறைக்கும் உதவுகிறது.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon