Link copied!
Sign in / Sign up
27
Shares

6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான 6 உணவுகள்

குழந்தைகளுக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் போது, ஜீரணத்திற்கான என்சைம்கள் உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் போது அந்த என்சைம்கள் முழுவதுமாக உற்பத்தியாகி விடும். இதனால், அவர்களுக்கு மசித்த திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். இங்கே உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சில உணவுகளை பார்ப்போம்.

1 மசித்த பழங்கள்

உங்கள் குழந்தைக்கு கொடுக்க கூடிய முதல் திட உணவு ஒரு மசித்த பழமாக தான் இருக்க வேண்டும். இவை குழந்தைக்கு ஏதாவது அலர்ஜி ஏற்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். மசித்த பழங்களில் ஜீரணத்திற்கான என்சைம்கள் இருப்பதால், இவை எளிதில் ஜீரணமாகிவிடும். இந்த மசித்த பழத்தை, வேறு உணவு கொடுப்பதற்கு முன்பு, தொடர்ந்து ஒரு வாரம் கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு 8 மாதங்கள் ஆகும் போது பழத்தை மசிக்காமல் துண்டுகளாக கொடுக்கலாம். அதே சமயம் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தாத பழத்தை கொடுக்க வேண்டும்.

2 கஞ்சி

ஒரு வார திட உணவு கொடுத்த பின்பு இதை கொடுக்கலாம். இதை செய்வது மிகவும் எளிது. அரிசியை வேகவைத்து, தண்ணீரில் நன்கு மசித்து கொடுக்க வேண்டும். குழந்தை சாப்பிட கூடிய சூட்டிற்கு கஞ்சியை ஆற வைத்து கொடுக்க வேண்டும். குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால் கொடுக்க வேண்டாம்.

3 காய்கறி

காய்கறிகளை நன்றாக வேக வைத்து மசித்து கொடுக்கலாம். அதை நன்றாக ஆறியவுடன் கொடுக்க வேண்டும். பழத்தை போலவே ஒரு காய்கறியை முதலில் கொடுக்க வேண்டும். அவற்றால் ஏதாவது அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். குழந்தைக்கு 8 மாதங்கள் ஆகும் போது காய்கறிகளை நன்றாக வேகவைத்து மசிக்காமல் துண்டுகளாக கொடுக்கலாம். அலர்ஜி ஏற்படுத்தும் காய்கறிகளை தவிர்க்கவும்.

4 தானியங்கள் மற்றும் பருப்புகள்

ஏதாவது ஒரு தானியத்தை அல்லது பருப்பை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அது ஆறியவுடன், குழந்தைகளுக்கு கொடுத்து அலர்ஜி ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் ஆகும் போது இவற்றுடன் மசித்த பழம் அல்லது காய்கறியை சேர்த்துக்கொள்ளலாம். அவர்களுக்கு அலர்ஜி ஏற்படாததாய் பார்த்து கொடுக்க வேண்டும்.

5 புரதம்

புரதத்தை இறைச்சியின் மூலம் குழந்தைக்கு கொடுக்க செய்யலாம். இறைச்சியை நன்றாக வேகவைத்து கொள்ள வேண்டும். பின்பு, அதை நன்றாக அரைத்து அல்லது மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதில் இரும்புசத்து அதிகமாக இருப்பதால் 6 மாத குழந்தைக்கும் கொடுக்கலாம். ஆனால், இறைச்சி கொடுப்பதற்கு முன் உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் ஆலோசனையை பெறுங்கள். நீங்கள் கீரையை கூட நன்றாக வேகவைத்து மசித்து சாதத்துடன் குழந்தைக்கு கொடுக்கலாம்.

6 பால் பொருட்கள்

உங்கள் குழந்தைக்கு 8 மாதங்கள் ஆகும் போது தயிர் கொடுக்க ஆரம்பிக்கலாம். சில மருத்துவர்கள் 6 மாதங்கள் ஆகும் போதே கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று சொல்வார்கள். 8 மாதங்களில் நீங்கள் தயிரை ஏதாவது ஒரு மசித்த பழத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.

மேற்சொன்ன அனைத்தும் உங்கள் குழந்தைக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கியிருக்கும் என்று நம்புகிறோம். இதை மற்ற தாய்மார்களுக்கும் பகிருங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon