Link copied!
Sign in / Sign up
11
Shares

6 மாத கர்ப்பத்தில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத 5 விஷயங்கள்

6 மாதக் கர்ப்பம் என்பது முதல் கட்டத்தை கடந்த இரண்டாவது கட்டமாகும். இப்பொழுது உங்களின் வயிறு பெரிதாகி தெரியாதவர்களுக்குத் தெரியும் படி இருக்கும். சிறுது சங்கடமாகவும் இருக்கும் என நாங்கள் அறிவோம். இந்த தெரியாதவர்கள், உங்களுக்கு அறிவுரை வழங்கி யாரை கேட்க வேண்டும், எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது   என்ற குழப்பமான நிலைமையில் விடுவர். இதை உங்களுக்கு எளிதாக்க இதோ எளிய வழிமுறைகள் கீழே குறிப்படப்பட்டுள்ளது.

1 செய்யக்கூடியவை
1 உங்கள் கர்ப்பக்கால அலமாரியை சீர்படுத்துங்கள்

உங்கள் கர்ப்பக்கால உடைகளில் செலவிட சரியான தருணம் இது. இக்காலத்தில் உங்கள் ஆடைகள் உங்களுக்கு அழகை விட உங்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. உங்கள் ஹை ஹீல்களுக்குப் பதிலாக வசதியான செருப்பை வாங்குங்கள். எனினும் உங்கள் பேஷன்னை விட தேவை இல்லை. ஏன்னெனில் கர்ப்பகால உடைகள் முன்பை விட இப்பொழுது வசதியாகவும், பேஷனாபிலகவும் வந்துவிட்டது.

2 ஈரப்பதமூட்டல், ஈரப்பதமூட்டல், ஈரப்பதமூட்டல்

வரித்தழும்பு கர்ப்பத்தின் போது வரும் வலிமிக்க பக்க விளைவுவாகும். உங்கள் வயிறு பெரிதாகும் பொழுது வறண்ட வலி கொடுக்கும் வரித்தழும்புகளை உண்டாக்கும். இதனை சமாளிக்க நிறைய பொருட்கள் வந்துவிட்டது. இக்காலகட்டத்தில் ஈரப்பதமூட்டல் முக்கியமாகும். நன்கு ஹைட்ரடேட் ஆகா இருப்பதை தவிர, உங்கள் சருமத்திற்கு வெளிப்புற ஈரப்பதமூட்டல் தேவை. அவற்றில் சிறந்தவற்றை வாங்கி, தூங்க செல்லும் முன் உபயோகப்படுத்துங்கள்.

3 பல் மருத்துவரிடம் செல்லுங்கள்

பல் மருத்துவரிடம் செல்வது, எப்போதும் சுகமாக இருக்காது. எனினும், கர்ப்பத்தின் போது ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சொத்தை பற்கள், ஈறுகளில் வீக்கம் மற்றும் பற்சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் பல் மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது.

4 கர்ப்பகால டைரி

நீங்கள் டைரி எழுதுவீர்கள் என்றால் அற்புதம். இல்லையெனில் எழுத துவங்குவதற்குச் சிறந்த தருணம். நடு இரவில் முழிக்கும் பொழுது, வினோதமான கனவு வர வாய்ப்புண்டு. டைரி எழுதுவது மனஅழுத்தத்தைக் குறைக்கும். கர்ப்பத்தின் போது நிகழ்ந்த வினோதமான சம்பவங்களை நினைவுகூற, குழந்தையிடம் சொல்ல சிறந்த வழியாகும்.

5 ஓய்வு எடுங்கள்

விடுமுறைக்குச் செல்ல, வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்கச் சிறந்த தருணம் ஆகும். 6 ஆம் மாதத்தில் உங்களின் காலை நோய் சரியாகி, இன்னும் தெம்புடன், இன்னும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். அதனால் இந்நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2 செய்யக்கூடாதவை
1 அதிகமாக எதிர் மருந்துகள் எடுப்பதை தவிருங்கள்

மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்து உட்கொள்வது சரியான முடிவு இல்லை என்பதை உணர்த்திருப்பீர்கள். ஆதலால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் நீங்கள் உட்கொள்வதை பொறுத்தே அமையும். ஆதலால், எவ்வளவு சிறிய பிரச்சனை ஆயினும் மருத்துவரை அணுகிய பிறகே மருந்தை எடுத்துக்கொள்ளவும்.

2 குப்புறப் படுக்காதீர்கள்

இந்த கட்டத்தில் உங்கள் குழந்தை வளரும். உங்கள் இடப் புறமாக படுத்து, முதுகுத் தண்டிற்குச் சுமைத் தருவதைத் தவிர்க்கவும். குப்புறப் படுப்பதால், மூச்சுத் திணறல் அல்லது குழந்தைக்கு ரத்த ஓட்டம் தடை பெற வாய்ப்பு உள்ளது. காலிற்கு இடையில் தலையணை வைப்பதால் கூடுதல் சுகம் கிடைக்கும்.

3 மருத்துவர் சந்திப்பைத் தவிர்க்காதீர்கள்

சில பரிசோதனைகள் செய்வதால், சில பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் எச்சரிப்பர். அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம். அதனால், மருத்துவரின் சந்திப்பை தவிர்க்காமல், பரிசோதனைக்கு செல்லுங்கள்.

4 சாப்பாட்டை தவிர்க்காமல் இருக்கவும்

ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடு முக்கியம் எனினும், அதற்காக பட்டினி கிடக்கக் கூடாது, அதுவும் முக்கியமாக கர்ப்பத்தின் போது. உணவு கட்டுப்பாட்டிற்காக இல்லை எனினும் அதிக நேரம் பசியால் இருப்பதைத் தவிர்க்கவும். இது உங்களின் மற்றும் குழந்தையின் சக்கரையின் அளவை சரியாக வைத்துக்கொள்ள உதவும். முடிந்த வரை உங்களுடன் சிறிது தின்பண்டங்களை வைத்துக்கொள்ளவும்.

5 ஆபத்தான விளையாட்டுகளை தவிர்க்கவும்

நிறைய எனர்ஜியை செலவிடமல் இருக்கவும் காயம் ஆகாமல் தடுக்கவும் விளையாட்டையை தவிர்க்கவும். உங்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கவும் எனினும், ஆபத்தான விளையாட்டில் இருந்து தள்ளியே இருக்கவும். உங்கள் மருத்துவர், எவ்வாறு பாதுகாப்பாகவும், என்ன விளையாட்டு விளையாடலாம் என உங்களை வழிநடத்துவார்.

இதை தவிர, சில ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளான, ஆரோக்கியமான உணவு, சிறுது உடற்பயிற்சி மற்றும் புகை மாற்று மதுவை தவிர்த்தல் ஆகியவற்றை முதல் மூன்று மாதங்களில் இருந்து கடைபிடிக்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon