Link copied!
Sign in / Sign up
243
Shares

5 ஆரோக்கியமான மற்றும் சுவையான கஞ்சி சமையல் குறிப்புகள்

5 ஆரோக்கியமான மற்றும் சுவையான கஞ்சி சமையல் குறிப்புகள்

உங்கள் குழந்தை சரியாக உண்ணுவதில்லையா? எதை அளிப்பது என்று உங்களுக்குக் குழப்பமா? கவலையை விடுங்கள்! இதோ எங்களின் சுவையான சமையல் குறிப்புகள்...

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் முக்கியமான ஒன்று கஞ்சி, இதன் மென்மைத் தன்மை குழந்தைகளின் சுவை மொட்டுக்களுக்கு ஏற்றதாய் அமைகிறது. இது சக்தி அளிப்பதாகவும்,  சுவையாகவும், எளிதில் செரிமானம் அடைவதாலும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

இதை அனைத்து வயதினருக்கும் அளிக்கலாம். கஞ்சி வகைகள் தயாரிக்கும் முறை பற்றி காணலாம்.

1. அரிசி - தானிய கஞ்சி

ஆறு மாதத்திலிருந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

½  கப் தண்ணீர், பழுப்பு அரிசி (Brown Rice) மற்றும் தானியங்கள்.

செய்முறை

1. பழுப்பு அரிசி (Brown Rice) மற்றும் தானியங்களை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

2. பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைக்கவும்.

3. கொதிநீரில் 2 தேக்கரண்டிகள் அரிசி-தானிய பொடியை சேர்த்து, கட்டி சேராது, கிளறி விடவும்.

4. இந்த  கலவையில்,பால் சேர்ப்பது, மெல்லிய சுவையான கஞ்சிப் பதத்தைத் தரும்.

5. கஞ்சியின் இனிப்பு சுவைக்கு, ஏதேனும் உங்களுக்கு பிடித்த பழத்தை சேர்த்துக் கொள்ளவும்.

2. கேழ்வரகுக் கஞ்சி

ஆறு மாதத்திலிருந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.


தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி கேழ்வரகு மாவு, ½ கப் தண்ணீர் (தேவைக்கேற்ப)

செய்முறை

1. கேழ்வரகு மாவை நீருடன் சேர்த்து, கட்டி சேராது கலக்கவும்.

2. இக்கலவையை 5-10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில், கேழ்வரகு நன்றாக வேகும் வரை வைத்தருக்கவும்.

3. ஓட்ஸ் கஞ்சி

ஆறு மாதத்திலிருந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

½ கப் ஓட்ஸ்

செய்முறை

1. பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைக்கவும்.

2. கொதிநீரில், ஓட்ஸ் சேர்த்து சமைக்கவும்.

3. கஞ்சிக்கு மேலும் சுவை சேர்க்க, ஏதேனும் உங்களுக்கு பிடித்த பழத்தை சேர்த்துக் கொள்ளவும்.

4. கஞ்சி சரியான பதத்திற்கு வரும் வரை சூடுபடுத்தவும்.

4. ஜவ்வரிசிக் கஞ்சி

ஏழு மாதத்திலிருந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

2 தேக்கரண்டிகள் ஜவ்வரிசி, சிறிதளவு ஏலக்காய் பொடி, சிறிதளவு  பாதாம் பொடி

செய்முறை

1. ஜவ்வரிசியை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்யவும்.

2. ஜவ்வரிசி அளவு சிறியதாயின், 15-20 நிமிடங்களுக்கும், பெரிதாயின் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

3. நீரைக் கொதிக்க வைத்து, அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து, கஞ்சிப் பதத்திற்கு சமைக்கவும்.

4. பின், சிறிதளவு ஏலக்காய் மற்றும் பாதாம் பொடியை சேர்க்கவும்.

5. ரவைக் கஞ்சி  

ஆறு மாதத்திலிருந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் ரவை, 2 தேக்கரண்டிகள் நெய், சிறிதளவு ஏலக்காய் பொடி, 3 கப் தண்ணீர்.

செய்முறை

1. முதலில் ரவையை வறுத்துக் கொள்ளவும்.

2. பாத்திரத்தில், 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

3. கொதிநீரில், வறுத்த ரவையை சேர்த்து, கட்டி சேராது கிளறவும்.

4. பின் நெய் சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

5. கஞ்சிக்கு மேலும் சுவை சேர்க்க பாலைச் சேர்க்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon