Link copied!
Sign in / Sign up
1
Shares

கோடைகாலத்தில் உட்கொள்ள வேண்டிய 4 பழங்கள்..!

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே மக்கள் மனதில் வெயிலின் தாக்கத்தைப் பற்றிய ஒருவித பயம் எழும். அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது; இந்த வெயிலின் கொடுமையிலிருந்து மீள, சிலவகை பழங்கள் பெரிதும் உதவுகின்றன. அப்படிப்பட்ட, கோடைகாலத்திலிருந்து நம்மைக் காக்க உதவும் பழங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!!   

தர்பூசணி 

கோடைகாலத்தில் எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணித்து, வயிற்றுப் பொருமலைக் குறைத்து, பசியைப் போக்கும் தன்மையுடையது; பித்தச்சூடு, வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை தர்பூசணி உடனடியாக சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் உருவதைத் தடுக்கும் மருந்தாகவும், உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாகவும் தர்பூசணி விளங்குகிறது.

ஆரஞ்சு 

பசியைத் தூண்டவும், பித்தத்தைப் போக்கவும், இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது; இது ஆயுர்வேத வைத்திய முறையில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஆரஞ்சு பழமானது, வாயைச் சுத்தமாக்கவும், காய்ச்சலுக்கும் அருமருந்து. மேலும் இது அடிவயிற்று வலியைக் குறைத்து, குடற்புழுக்களை அழிக்க வல்லது. ஆரஞ்சு எலும்புகளை வலுப்படுத்தி, ஆஸ்துமா மற்றும் நெஞ்சு தொடர்பான நோய்களை போக்க வல்லது.

சாத்துக்குடி 

குளிர்ச்சியான, சுவையான, இனிப்பான பழம் சாத்துக்குடி; இது தாகத்தைத் தணிக்கும். வயிற்றுப் பொருமல், இருமல், வாயு, வாந்தி, செரிமானமின்மை, தண்ணீரற்றுப்போகும் வறட்சிநிலை, இரத்தத்தில் கழிவுப்பொருட்கள் சேருதல் போன்ற கோளாறுகளுக்கு இது நல்ல நிவாரணமாக இருக்கிறது.

வயிற்றினில் அமிலத்தன்மை சேருவதை இப்பழத்திலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும், உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது; காய்ச்சலின் போது வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும், உடலுக்கு வேண்டிய சக்தி உடனடியாக கிடைத்துவிடும். சாத்துக்குடி அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கி, செரிமானக்கோளாறுகளை வேகமாகப் போகச் செய்யும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் பிஞ்சு, காய் என 2 வகையுண்டு; வெள்ளரி ஒரு நல்ல நீரிளக்கி. இது செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது; வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டி, சிறுநீரகக் கோளாறுகளைச் சரி செய்கிறது; மேலும் நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon