Link copied!
Sign in / Sign up
3
Shares

நான்கு மாத கர்ப்பிணிகள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்...

கர்ப்பிணிகளே! முதலில் நான் வாழ்த்துக்களை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில், முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் நீங்கள் இறுதியில் 4 மாத கடின காலத்தை கடந்துவிட்டீர்கள். இப்போது தான் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்னும் அடுத்த கட்ட நிலையை தெளிவாய் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதைப்பற்றிய பயனுள்ள பதிவு தான் இது.

என்ன எதிர்ப்பார்க்க வேண்டும்?

1. முதல் மூன்று மாதங்களில் கண்ட கடினங்கள் குறையுமென நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். ஆம், காலை சுகவீனம் மற்றும் தலைசுற்றல் என்பது இந்த 4 ஆவது மாதத்தில் குறைந்திருப்பது போன்றதோர் உணர்வை தரும்.

2. உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, ஆடைகளில் தளர்வுடன் நீங்கள் இருக்க வேண்டியது முக்கியம்.

3. இந்த மாதத்தில் உங்களை பரிசோதனை செய்யும் மருத்துவர் முதல் அல்ட்ரா சவுண்டை பயன்படுத்த பரிந்துரை செய்வார்.

4. உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை முதல் முறையாக கேட்ட நீங்கள், அதுதான் வாழ்க்கை என நினைத்து குழந்தை பிறக்கும் வரை ஒருவித சிந்தனையுடன் இருக்கக்கூடும். ஆனால், அந்த சிந்தனைகள் எப்படி கருவிலிருக்கும் உங்கள் குழந்தையை வலுப்படுத்துவது என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

5. குழந்தையை எதிர்பார்த்து உற்சாக பெருவெள்ளம் உங்கள் மனதில் ஓட, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களை இராணியாகவும் பார்ப்பர்.

என்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்?

1. நீங்கள் மந்தமான நிலையிலிருக்க அடிக்கடி கழிவறை செல்லவும் மனதில் தோன்றும். இதற்கு காரணம், இடுப்பு தசைகள் தளர்வடைய புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

2. உங்களுடைய கருப்பையின் அளவானது திராட்சை பழ அளவில் இருக்கும். அத்துடன் உங்கள் வயிறு நிரம்பியதைப்போல் ஒரு உணர்வையும் மனதில் தரும்.

3. உங்கள் வயிற்றில் ஏதோ ஒரு மாற்றம் தெரிய, உங்கள் வயிறு அகன்று விரிந்திருக்க தொப்புளை சுற்றி சிறிய பானை வைத்தார்போலும் இருக்கும்.

4. உங்கள் மார்பகம் திடீரென பெரிதாக, தாய்ப்பால் தருவதற்கான சூழலும் மெல்ல உருவாகும். 

5. குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் என்பது இதற்கு முன்னாள் இருப்பதைவிட குறைவாக காணக்கூடும்.

6. உங்களுடைய ஆற்றல் அளவு அதிகரிக்க, உங்கள் கணவனுடன் நேரத்தை செலவிடவும் செய்யலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon