Link copied!
Sign in / Sign up
34
Shares

3 முதல் 6 மாத குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கான 5 வீட்டு மருத்துவ குறிப்புகள்

குழந்தை பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து பேச துவங்கும் வரை அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதை பெற்றோர் அறிந்து கொள்வது மிகவும் சிரமான ஒன்று. குழந்தைகளின் அழுகையை வைத்து எதனால் அழுகிறார்கள் என்பதை அறிய அவர்களுக்கு சில காலம் எடுக்கும். குழந்தைகளுக்கு சளி ஏற்படும் போது அவர்களுக்கு மருந்துகளை கொடுப்போம். குழந்தைகளுக்கு இரசாயனங்களின் கலப்பில் உருவான மாத்திரைகளை தவிர்த்து, வீட்டில் கிடைக்கும் மருந்து பொருட்களை கொண்டு சரி செய்யலாம். இங்கு 3 முதல் 6 மாத குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கான வீட்டு மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம். 

1 தாய்ப்பால்

ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்த மருந்து. இதில் இருக்கும் ஆண்டிபயாடிக் குழந்தைக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. இது குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அவர்களை பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. தாய்ப்பாலை இரு மூக்கிலும் சில துளிகள் இடுவதன் மூலம் சரி செய்யலாம்.

2 ஓமம்

ஓமம் அல்லது கேரம் விதைகள் எனப்படும் இவை வைரஸ் மற்றும் பாக்டீரியாகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளை கொண்டிருக்கின்றன. வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓமத்தை வறுக்கவும். பின் அதை சுத்தமான காட்டன் துணியில் போட்டு, பொட்டலம் போல் கட்டி கொள்ளவும். அதன் சூடு குழந்தை தாங்கும் வெப்பநிலைக்கு வந்ததும், குழந்தையின் மார்பு, முதுகு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்க்கவும்.

இதை குழந்தையின் மூக்கின் அருகில் வைப்பது, அவர்களின் சுவாசத்தின் வழியில் உடலிற்குள் சென்று நல்ல பலனை தரும்.

3 குங்குமப்பூ

சளிக்கு குங்குமப்பூ ஒரு சிறந்த மருந்து. இது சளி, இருமல், நெஞ்செரிச்சல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. பெரியவர்கள் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு அப்படி கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக, சிறிது குங்குமப்பூவை சில துளி தண்ணீர் சேர்த்து அரைத்து குழந்தையின் தலை, மார்பு, தொண்டை மற்றும் பாதங்களில் தடவலாம். இதை தினமும் செய்து வர சிறந்த பலன் தரும்.

4 கல் உப்பு

ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிதமான சூட்டில் இருக்கும் கடுகு எண்ணையுடன் சேர்த்து குழந்தையின் மார்பு மற்றும் முதுகு பகுதியில் மசாஜ் செய்யவும். பின் குழந்தையை காட்டன் துணி அல்லது போர்வையாய் போர்த்தி விடவும். இந்த கலவை உங்கள் குழந்தைக்கு கதகதப்பை தரும்.

5 பூண்டு

பூண்டின் சில பற்களை கடுகு எண்ணையில் வேக வைக்கவும். பின் அந்த எண்ணையை குழந்தையின் கழுத்து, மார்பு மற்றும் முதுகு பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டியது அவசியம்.

கடுகு எண்ணெய் குழந்தைக்கு கதகதப்பை தரவும், பூண்டு பாக்ட்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டுள்ளதால் அது சளிக்கு காரமான பாக்ட்டீரியக்களை அழிக்கவும் உதவுகிறது.

 

பொறுப்பு துறப்பு : மேற்கூறிய மருத்துவ குறிப்புகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று பின் முயற்சிக்கவும்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ 

 
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon