Link copied!
Sign in / Sign up
0
Shares

2018 மத்திய பட்ஜெட்டில் மகப்பேறு பெண்களுக்கான திட்டம் அறிவிப்பா?

டெல்லி:

பா.ஜா.க அரசின் ஐந்தாவது  பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கல் தொடர்பாக கலவையான விமர்சனம் அரசியல் கட்சிகளுக்கு நடுவில் வலம் வர, மகப்பேறு பெண்களுக்கான திட்டம் ஒன்றும் இந்த அம்சங்களுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. முதலில், குடியரசு தலைவர், இராம் நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒப்புதலை பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் பேசிய அருண் ஜெட்லி, நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இது இருக்குமெனவும், பட்ஜெட்டில் விவசாயம், கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள் இருப்பதாகவும் கூறி அதன் பின்னர் பட்ஜெட்டை வெளியிட்டார்.

இதில் மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக நீட்டிப்பு உண்டான பல சிறப்பம்சங்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

மகளிர் வாழ்வில் முக்கியமான ஒன்று மகப்பேறு என்பது. இந்த மகப்பேறு காலத்தில், கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவே ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். ஆனால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதற்கான வாய்ப்பை அவர்கள் பணிபுரியும் அலுவலகமே ஏற்படுத்தி தர வேண்டிய சூழல் எங்கும் நிலவுகிறது.

அதேபோல், குழந்தை பிறந்த பின்னும், தாயால் குழந்தை பேணி பாதுகாக்க வேண்டிய விடுப்பு என்பது ஒரு பெண்ணுக்கு தேவைப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு உலகிலேயே முதன் முதலில் மகப்பேறு கால விடுப்பை சுவீடன் தேசம் அறிமுகப்படுத்தியது. இந்த மகப்பேறு கால விடுப்பு மசோதா அமலுக்கு வந்த நிலையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. முதல் இடத்தில் 50 வாரங்கள் விடுப்பு தரும் கனடாவும், இரண்டாவது இடத்தில் 44 வாரங்கள் விடுப்பு தரும் நார்வேயும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுமுறை என்பது 26 வாரங்களாக அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிவித்தார்.

அத்துடன் மருத்துவ ரீதியான மற்ற சில பட்ஜெட்களும் கூட சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. 

காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாதந்தோரும் 500 ரூபாய் வழங்கப்படும் என்றும், காசநோயாளிகளுக்கு ஊட்டசத்துக்கு உதவும் வகையில் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் உண்டான பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

சுகாதார மையங்களுக்கு 1,200 கோடி நிதி ஒதுக்கீடு.

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 இலட்சம் வரை மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும்.

ஏழை குடும்பங்களுக்கு புதிய இலவச மருத்துவ திட்டத்துக்கு 1200 கோடி ஒதுக்கீடு உண்டான பல சிறப்பம்சங்களும் இந்த பட்ஜெட் மசோதாவில் நிறைவேற்றப்பட்டது...

இருப்பினும், ஒரு சில திட்டங்கள் நடுத்தர மக்களை பாதிக்கும் என ஒரு சிலர் விமர்சித்து வர, பட்ஜெட் திட்டம் பற்றிய கலவையான விமர்சனம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon