Link copied!
Sign in / Sign up
7
Shares

1 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 5 உணவுகள்..!

குழந்தைகள் ஒரு வயதை எட்டும் வரை, அவர்கள் வளர்ச்சி நிலையிலேயே இருப்பர்; அதாவது குழந்தைகளின் உள்ளுறுப்புகள் பிறந்த பின்னும் முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்காது. குழந்தை பிறந்த முதல் ஒரு வருட காலத்தில் தான் அதன் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு திறன் என எல்லாம் முழுமையான வளர்ச்சியை அடைய தொடங்கும். ஆகையால், குழந்தைகளின் முதல் ஒரு வருட பயணத்தில் அவர்களுக்கு அளிக்கக்கூடாது சில உணவுகள் பற்றி இங்கு படித்தறிவோம்..!

1. தேன்..!

தேனில் Clostridium botulinum என்னும் பாக்டிரியா உள்ளது; குழந்தையின் செரிமான மண்டலம் சரியான வளர்ச்சியை பெற்றிருந்தால் மட்டுமே இந்த பாக்டிரியாவினை எளிதில் ஜீரணிக்க இயலும். ஆகையால் ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு தேன் அளிப்பது நல்லதல்ல..!

2. பருப்புகள்..

பருப்புகள், குழந்தைகளுக்கு அதிக சக்தி அளிப்பவையே! ஆனால், குழந்தைகள் முழுமையான பற்கள் வளர்ச்சியை பெற்றிருக்காது. ஆகையால் கடலை மற்றும் பருப்பு வகைகளை ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

3. சிட்ரஸ் பழங்கள்..!

சிட்ரஸ் பழங்கள் சற்று அதிக அமிலத்தன்மை கொண்டிருப்பதால், இதை உண்ணும் குழந்தைகளில் ஒவ்வாமை மற்றும் உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகையால் இப்பழங்களை குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லது.

4. பச்சை அல்லது வேகவைக்காத காய்கறிகள்..

வேகவைக்காத பச்சைக் காய்கறிகளை குழந்தைகள் மென்று உண்டு, செரிமாணமாக்குவது கடினம்; ஆகையால் தாய்மார்கள் இவ்வகை காய்களை குழந்தைகளுக்கு அளிக்காமல் இருப்பது நல்லது.

5. மாட்டுப்பால்..!

மாட்டுப்பாலில் அதிக புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளதால், குழந்தைகளுக்கு ஜீரணக்கோளாறு ஏற்படும்; ஆகையால் குழந்தைகளுக்கு முடிந்தவரை தாய்ப்பால் மற்றும் பார்முலா பாலையே கொடுப்பது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon