Link copied!
Sign in / Sign up
0
Shares

ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் துருவ நட்சத்திரம் டீசர்! வீடியோ உள்ளே!

விக்ரமின் நடிப்பில் வெளிவரவிருக்கும் சாமி ஸ்கொயர் பீவர் குறையும் முன்னரே ஹாலிவுட் தரத்தில் டீசர் வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க செய்திருக்கிறது துருவ நட்சத்திரம் படக்குழு. விக்ரம் நடித்தாலே அது ஸ்பெஷல் தான். அதுவும் விக்ரமுடன் நம்ம கவுதம் மேனன் கைக்கோர்த்தால் சொல்லவா வேண்டும்.

கவுதம் மேனன் இளம் இயக்குனர்கள் பலருக்கு ஒரு ரோல் மாடல் எனக்கூட சொல்லலாம். மலையாள மஞ்சிமாவை தமிழில் உயரம் தொட உதவிய ஒரு வடக்கன் செல்பி திரைப்படத்தை யாரால் தான் மறுக்க முடியும். 

ஆக்ஷன் களம் முதல் லவ் மூவி வரை எடுப்பதில் இவரை மிஞ்ச யார் என்பதற்கு சிறந்த உதாரணம் விண்ணை தாண்டி வருவாயாவில் தொடங்கி., காக்க காக்க, அச்சம் என்பது மடமையடா என இன்று வரை நீண்டுக்கொண்டே வருகிறது.

ஒரு பயோபிக் படத்தை பயோபிக் என விளம்பரப்படுத்தாமல் எடுக்க கவுதம் மேனனால் மட்டுமே முடியும். பொதுவாக பயோபிக் திரைப்படம் என்றால் ஹீரோவுக்கு மட்டும் தான் பேச அனுமதி அதிகம் இருக்கும். அந்த பார்முலாவை உடைத்து வில்லனுக்கும் மாசான வாழ்க்கை உண்டு என்பதை நிரூபித்த கவுதம் மேனன் படங்கள் எத்தனையோ உண்டு.

வசனத்தில் வசீகரிக்கும் இவர் திரைப்படங்கள் ஒளிப்பதிவு வரை சொதப்பலின்றி அமைவதே இவர் திரைப்படத்துக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து களம் காண போகும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.

விக்ரம் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீசர் சற்று நேரத்துக்கு முன்பு வெளியிடப்பட, இத்திரைப்படம் கவுதம் மேனனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதை காட்சி அழகால் நிரூபித்திருக்கிறது.

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, சிம்ரன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை கவுதம் மேனன் ஒன்றாக எண்டெர்டைன்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்திருக்கிறது.

துருவ நட்சத்திரத்தின் முதல் டீசர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மற்றுமோர் டீசர் சற்று நேரத்துக்கு முன்பு வெளியாகி நல்ல கருத்துக்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon