Link copied!
Sign in / Sign up
311
Shares

ஸ்ரீரங்கத்து வத்தல் குழம்பு செய்வது எப்படி?

பிராமண குடும்பத்தின் ஸ்பெஷல் சைவம். என்ன தான் நாம் கறி, மீன் என சாப்பிட்டாலும் இவர்கள் சைவ உணவை மட்டுமே உண்டு எல்லா சத்துக்களையும் ஒருங்கே பெற்று அறிவாற்றலுடன் விளங்குகின்றனர். கறி இறைச்சியில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் கொண்டைக்கடலையிலும் உண்டு என்கின்றனர். ஆனாலும், ஐயர் வீட்டு சைவ உணவை மிஞ்ச வேறு எந்த சமையலும் இல்லை என்பது உண்மை. அதிலும் ஸ்ரீரங்கத்து வத்தல் குழம்பின் சுவையை வாயால் மட்டும் சொல்லிவிட்டால் போதுமா என்ன! நீங்களும் செய்து தான் பார்க்கலாமே!

தேவையான பொருட்கள்:

சுண்டக்காய் - 1 கப் 

வெந்தயம் - 2 டீஸ்பூன் 

உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

மல்லி - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

வரமிளகாய் - 4 

புளி - எலுமிச்சை அளவு 

சின்ன வெங்காயம் - 50 கிராம் 

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன் 

அரிசி - 1 டேபிள் ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

நல்லெண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 

கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. புளியை கரைத்து, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

3. அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

4. மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

5. பின் வெங்காயம் வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறவும்.

6. அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

7. பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

8. குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

9. அவ்வளவு தான் சுவையான ஸ்ரீரங்கத்து வத்தல் குழம்பு இதோ ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon