Link copied!
Sign in / Sign up
2
Shares

வீட்டிலேயே நன்னாரி சர்பத் தயாரிப்பது எப்படி?

கோடைக்காலம் வந்துவிட்டால் ஏதாவது குளிர்பானம் அருந்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து குறைந்து உடல் வறட்சியுடன் காணப்பட செய்யும். தாழம்பூ சர்பத் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தந்து நம்மை காக்க வல்லது. அது போல் ஒரு சர்பத் தான் நன்னாரி. இந்த சர்பத் பார்ப்பதற்கு ஜெல் போன்று இருக்கும். இது ஒரு சுவையான சர்பத்தும் கூட... 

தேவையான பொருட்கள்:

நன்னாரி வேர் - 25 கிராம் 

பாதாம் பிசின் - 10 கிராம் 

எலும்பிச்சைப் பழம் -1 

சர்க்கரை - 2 கப் 

சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன் 

சோடியம் பென்சோயேட் - 1 சிட்டிகை 

தேன் - தேவையான அளவு 

செய்முறை நேரம் - 60 நிமிடங்கள்

எத்தனை பேர் பருகலாம் - 2

செய்முறை:

1. நன்னாரி வேரை நன்கு அலசி அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி 24 மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

 2. அதன்பிறகு வடிகட்டி அந்த நீருடன் சர்க்கரையையும் சிட்ரிக் ஆசிட்டையும் சேர்த்து சூடுபடுத்துங்கள்.

3. சர்க்கரை கரைந்ததும் மெல்லிய துணியால் அதை வடிகட்டிக்கொள்ளுங்கள். 

4. பின்னர் அதில் சோடியம் பென்சோயட் சேர்த்துக் கலக்கி, உலர்வான பாட்டிலில் ஊற்றிவையுங்கள்.

5. இதை அப்படியே பருகாமல் 1 பங்கு நன்னாரி சிரப்புக்கு 3 பங்கு தண்ணீர்விட்டு பாதாம் பிசின், சில துளி எலுமிச்சைச் சாறு, சிறிதளவு தேன் விட்டுப் பருகினால் சுவை அருமையாக இருக்கும். 

6. வீட்டில் செய்யும் இந்த நன்னாரி சர்பத் 6 மாதங்கள்வரை கெடாது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon