Link copied!
Sign in / Sign up
3
Shares

வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி?

வளர்ந்த இவன் தன்னுடைய எல்லா பாகத்தையும் தந்து நம்மை பயனடைய வைப்பான். அவன் தான் வாழை மரம். வாழையின் இலையில் தொடங்கி சருகு வரை அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்வில் பெரிதும் உதவி வருகிறது. திருமண பந்தலில் தலைவாசலில் தளதளவென நிற்கும் இவன், வந்தவர்களை முதலில் உயர்ந்து வரவேற்பான்,விருந்தாளிகளுக்கு தலை வாழை விருந்து வைக்கவும் இவன் தவறுவதில்லை. ஒரு சில புறங்களில் வாழைப்பூவில் வடை செய்துக்கூட சாப்பிடுவர். காரணம், வாழைப்பூ மிகவும் சத்துள்ள ஒரு காய்கறியாகும். அதுவே வாழைப்பூவில் சப்பாத்தி செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இப்போது பார்ப்போமா! 

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - கால் கிலோ 

பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன் 

நார் நீக்கி நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் 

சின்ன வெங்காயம் - 7 

பச்சைமிளகாய் - 1 

பூண்டு - 2 பல் 

சீரகம் - 2 சிட்டிகை 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாயை நறுக்கி கொள்ளவும்.

2. பாசிப்பருப்பை, தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

3. இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். 

4. பின்னர் சூடு ஆறியதும், பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

5. இதை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போட்டு பரிமாறுவது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon