Link copied!
Sign in / Sign up
4
Shares

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்!

உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எதனால் குழந்தைக்கு இப்படி ஆனது? குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் யோசித்து யோசித்தே உங்கள் மூளை குழம்பிப் போயிருக்கும்! இவ்வாறு குழப்பத்தில் திளைக்கும் பெற்றோர்களுக்கு உதவவே இந்த பதிப்பை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்! படித்து பயனடையுங்கள் தோழியரே!

காரணங்கள்

குழந்தைக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் காரணங்கள் சிலவற்றை இங்கே அளித்துள்ளோம்; படித்தறியவும்.

1. முதன் முதலாக பல் முளைக்கும் போது 

2. குழந்தை திட உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது

3. உணவு சரியாக செரிக்கவில்லை எனில், 

4. தொற்று, வைரஸ் பாதிப்புகள், போன்றவற்றால், 

5. உள் உறுப்புகளில் உண்டாகும் பாதிப்புகளால், 

6. தொடர்ந்து அதிகப்படியான மருந்துகள் கொடுத்தால்,

7. சுத்தமில்லாத சூழலால், உணவால்,

8. வற்புறுத்தி, அளவுக்கதிகமான உணவளிப்பது

குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவுகள்..! 

அரிசிக் கஞ்சி - எளிதில் செரிமானமாகும் உணவு மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றலை அளிக்க வல்லது.

வாழைப்பழம் - பொட்டாசியம் நிறைந்த இந்தப்பழம், உடலில் குறைந்த தண்ணீர் சத்தினை ஈடுகட்ட உதவும். 

தாய்ப்பால் - தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அளித்து, நோய்த்தொற்றுகளை அளிக்க வல்லது.

தயிர் - தயிரில் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அளிக்கலாம்; இளநீர் கூட அளிக்கலாம்.

மாதுளை பழச்சாறு - இது குழந்தைகளுக்கு உடனடி ஆற்றல் அளிக்க ஏற்றது.

ஆப்பிள் - ஆப்பிளை கூழாக்கி அளிப்பது, குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட அசதியை விரட்ட உதவும்.

புதினாச்சாறு - இது குழந்தைகளின் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும்; இதை தேன் சேர்த்து அளிக்கலாம்.

லுமிச்சை சாறு - இதில் தேன் சேர்த்து அளிப்பது, குழந்தைகளின் சோர்வை போக்க உதவும்.

ஸ்டார்ச் - ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளிப்பது குழந்தைகளின் செரிமானத்திற்கு உதவும்.

உருளைக் கிழங்கு - இது அதிகம் ஸ்டார்ச் நிறைந்த உணவாகும்; குழந்தைகளுக்கு அளிக்க ஏற்றது.

தேன் - 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் அளிக்கலாம், இது அவர்களுக்கு பலமளிக்கும்.

தவிர்க்க வேண்டியவை!

இந்த மாதிரியான சமயத்தில், எடுத்த உடனேயே மாத்திரைகள், மருந்துகள், ஆண்டிபயாட்டிக்குகள் போன்றவற்றை அளிப்பது நல்லதல்ல; இந்த முறையை தவிர்த்தல் நல்லது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon