Link copied!
Sign in / Sign up
14
Shares

ருசியான செட்டிநாடு அயிர மீன் குழம்பு செய்வது எப்படி?

குழம்பு வகைகளில், அதுவும் அசைவ குழம்பு வகைகளில் அயிரை மீன் குழம்புக்கென்று ஒரு அசைக்க முடியாத இடமுண்டு. இது தென்னிந்திய மக்களின் மனதில், அதிலும் குறிப்பாக தமிழ் கிராமத்து மக்களின் விருப்ப உணவாக விளங்கி வருகிறது. இத்தனை பெருமை வாய்ந்த இக்குழம்பினை எப்படி செய்வது என்று படித்தறிவோமா? 

தேவையான பொருட்கள்!

அயிரை மீன் – 250 கிராம்/ வெங்காயம் ‍- 250 கிராம்/ தக்காளி – 2/ பூண்டு- 10 பல்/ மிளகாய் -3/ கறிவேப்பிலை, கொத்தமல்லி – கொஞ்சம்/ எண்ணெய்- ‍ 3 க‌ர‌ண்டி/ கடுகு, உளுந்தம் பருப்பு – அரைக்கரண்டி/ வெந்தயம் – கால் க‌ர‌ண்டி/ மிளகாய்த்தூள்‍ - 1 தேக்க‌ர‌ண்டி/ மல்லி தூள்- ‍ 1 மேஜைக்கரண்டி/ உப்பு – தேவைக்கேற்ப/ புளி- சிறிய எலுமிச்சை அளவு/ துருவிய தேங்காய் ‍ 3 தேக்கரண்டி

செய்முறை!

ஒரு பாத்திரத்தில் அயிரை மீனுடன், கல் உப்பு சேர்த்து மூடி வைத்து விட வேண்டும். பின், 3 முதல் 4 முறை தண்ணீர் விட்டு, மீனை நன்கு கழுவ வேண்டும்; ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் இவற்றை தாளித்து, இவை நன்கு வதங்கியவுடன், தக்காளி, உப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலா தூள் சேர்த்து, புளித்தண்ணீர் விட வேண்டும். இந்த குழம்பு நன்றாக கொதித்து, மசாலா வாடை நீங்கியதும் தான், மீனை போட வேண்டும், மீன் வெந்த பின் அல்லது 5 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் அல்லது தேங்காய்ப்பாலையும், கொத்தமல்லி இலைகளையும் சேர்க்க‌ வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon