Link copied!
Sign in / Sign up
0
Shares

பிறந்த அநாதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெங்களூரு பெண் காவலர் - குவியும் பாராட்டுக்கள்

தாய்ப்பால் தருவதென்பது தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு உன்னதமான விஷயமாகும். இந்த விஷயம் என்பது ஒரு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவை வலுப்படுத்துவற்கான ஒரு சிறந்த எடுக்காட்டாகவும் எல்லோருடைய வாழ்விலும் விளங்குகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது பெங்களூருவில் நிகழ்ந்திருப்பது அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது. 

அர்ச்சனா என்ற பெண்மணி பெங்களூரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். இவர் பிறந்த யாருமற்ற ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் தந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அர்ச்சனாவின் மனித நேயத்தை போற்றி பலரும் புகழ்ந்து வருகின்றனர். 

ஒரு முன்னணி பத்திரிக்கை நிறுவனம் மூலம் தெரிய வருவது என்னவென்றால், அக்குழந்தை பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகாமையில் பிளாஸ்டிக் கவரிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. 

தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார். ஆனால், குழந்தையின் வடிவம் மிகவும் மோசமான நிலையிலிருக்க, தொப்புள் கொடியுடன் இரத்தம் சொட்ட கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

உடனே நாகேஷ் குழந்தையை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சையை அளித்திருக்கிறார். அதன்பின்னர் காவல் நிலையத்துக்கு அக்குழந்தையை அவர் அழைத்து செல்ல அங்கே குழந்தையை கண்ட அர்ச்சனா, தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் பசியை போக்க உதவி செய்திருக்கிறார்.

இது பற்றி அர்ச்சனாவிடம் கேட்கும்போது, "என் குழந்தையே அழுத மாதிரி எனக்கு தெரிந்தது. அப்படி இருக்கும்போது அதை பார்த்துக்கொண்டு என்னால் எப்படி எதுவும் செய்யாமல் இருக்க முடியும். அதனால் குழந்தையை வாங்கி தாய்ப்பால் கொடுத்தேன்..." என்கிறார்.

யாருமற்ற அந்த அநாதை குழந்தை அரசாங்கத்தின் உடமை என்பதால் அக்குழந்தைக்கு கர்நாடக முதலமைச்சர் ஹச்.டி.குமாரசுவாமி அவர்கள் பெயரே வைக்கப்பட்டது. இதை பற்றி அதன்பின்னர் இன்ஸ்பெக்டர் நாகேஷ் பத்திரிகையாளரை சந்தித்து நடந்தவற்றை விவரித்தார்.

தற்போது அக்குழந்தை சிசு மந்திர் எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த கர்நாடக முதலமைச்சர் அர்ச்சனாவின் மனித நேய செயலை பாராட்டி டிவிட்டரில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு காவல் நிலையம் சார்பாக, "அநாதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய எங்கள் காவல்துறையை சார்ந்த அர்ச்சனாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..." எனும் பதிவை முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றனர். 

மகப்பேறு விடுமுறை முடிந்து சில நாட்கள் முன்பே பதவியில் அர்ச்சனா மீண்டும் இணைய, இந்த செயலை அவர் செய்ததன் மூலமாக #ThankYouArchana என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்டிங்கும் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த ஹேஷ்டாக்கை பின் தொடர்ந்து பலரும் தங்களது பாராட்டுக்களை அர்ச்சனாவிற்கு சமூக வலைத்தளங்களில் அளித்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

பிள்ளையை தூக்கி எறிந்து சென்றவர்கள் மத்தியில் மனித நேயத்துடன் அர்ச்சனா செய்த விஷயம் அனைவருக்கும் ஆக சிறந்த எடுத்துக்காட்டு என்று தான் கூற வேண்டும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon