Link copied!
Sign in / Sign up
0
Shares

முதியோர் இல்லத்தில் பிரபல நடிகை மரணம்!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான பகீஷா பாலிவுட் படம் புகழ் - கீதா கபூர் தான் பெற்ற பிள்ளைகளால், கொடுமைகளை அனுபவித்து, முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இப்பொழுது, தன் இன்னுயிரை இழந்து, இந்த மண்ணுலகை விட்டு நீங்கி சென்றுவிட்டார். அந்த நடிகையின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

பகீசா பாலிவுட் படம் புகழ் கீதா கபூருக்கு ராஜா எனும் மகனும், பூஜா எனும் மகளும் உள்ளனர்; வயதான அன்னையை பார்த்துக் கொள்ள விரும்பாத பிள்ளைகள், அவரை அநாதையாக இறக்க விட்டுவிட்டனர். வயதான தாயை பார்த்துக் கொள்ள விரும்பாத ராஜா, கீதா கபூரை கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனையில்  அனுமதித்துவிட்டு பணம் கொண்டு வருவதாகக் கூறிஅப்படியே நிராதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார்; ராஜா திரும்பி வரவே இல்லை.

கீதா கபூரின் நிலை அறிந்த அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி ஆகியோர் மருத்துவமனை செலவை ஏற்று, கீதா கபூரை முதியோர் இல்லத்திலும் சேர்த்துவிட்டனர்.

ஒரு வருட காலமாக முதியோர் இல்லத்திலிருந்த கீதா நேற்று காலை மரணமடைந்தார்; பிள்ளைகள் ஒரு முறையாவது வந்து தன்னை பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கத்திலேயே தன் உயிரை விட்டுவிட்டார். 

கீதா கபூரின் உடல் மும்பையிலுள்ள கூப்பர் மருத்துவமனையில் 2 நாட்கள் வைக்கப்படுகிறது; அவரின் பிள்ளைகள், அவருக்கு இறுதிச்சடங்கு செய்வார்கள் எனும் நம்பிக்கையில், அவரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கீதா கபூர் தனது மகனுடன் வசித்த போது 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது; மேலும் அம்மா என்று கூட பாராமல் அவரை அடித்து உதைத்து, அறையில் பூட்டி வைத்திருந்திருக்கிறார் மகன்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon