Link copied!
Sign in / Sign up
2
Shares

மீன் சூப் செய்வது எப்படி?

சிக்கன் சூப் - மட்டன் சூப் இதையெல்லாம் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்திருப்போம். ஆனால், மீன் சூப்! நானும் இதுவரை சுவைத்ததில்லைங்க. ஆனால் இந்த குறிப்பை கேட்டபிறகு உடனே மார்க்கெட்டுக்கு போய் மீனை வாங்கி வந்து வெட்டி தயார் நிலையில் வைத்துவிட்டேன். அட ஆமாங்க, செய்து சாப்பிடுவதற்கு முன் உங்களுக்கும் தெரியப்படுத்தலாமே என்பது தான் இப்போது என்னுடைய ஆசை. என்ன நீங்களும் மார்க்கெட்டுக்கு போக தயாரா?

மீன் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:

முள் இல்லாத சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள் 

இஞ்சி - 1

பூண்டு - 4 பல் 

சின்ன வெங்காயம் - 50 கிராம் 

பட்டை - ஒரு சிறிய துண்டு 

அன்னாசிப்பூ - 1 

ஏலக்காய் - 1 

மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி 

வெங்காயத்தாள் - தேவையான அளவு 

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

செய்முறை நேரம் - 30 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 2

செய்முறை:

1. பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் மூன்றையும் இடித்து வைக்கவும்.

2. தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

3. மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

5. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஆகியவற்றை சேர்த்து, நீர் கொதிக்க தொடங்கும் போது, மீனை சேர்க்கவும்.

6. அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்த்து, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

7. அவ்வளவு தான் சுவையான சூடான மீன் சூப் ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon