Link copied!
Sign in / Sign up
14
Shares

மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி?

மார்ச் மாதம் ஆரம்பித்து விட்டாலே, வெயில் தன் வித்தையைக் காட்ட தொடங்கிவிடும்; மே மாதம் வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை, சூரிய பகவான் நம்மை சுட்டெரித்து விடுவார். அடிக்கும் வெயிலுக்கு உடலை இதமாக வைக்க, எத்தனை பானங்களை நாம் தேடிப்பிடித்து பருகினாலும் அது மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டாவிற்கு ஈடாகாது.  

நாம் இந்த பதிப்பில் மதுரையின் பெருமைக்கு உகந்த பானமான, மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவினை வீட்டிலேயே எப்படி செய்வது என்று காணப்போகிறோம்..!

தேவையான பொருட்கள்!

பால் – 1 லிட்டர், சர்க்கரை – 8 மேஜைக்கரண்டி, ரோஸ் சிரப் – 1 மேஜைக்கரண்டி, நன்னாரி சிரப் – 1 மேஜைக்கரண்டி, சைனா கிராஸ் – 4 மேஜைக்கரண்டி, ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெண்ணிலா) – 1, பால் கோவா – 2 மேஜைக்கரண்டி

செய்முறை

1. முதலில் வாணலியில், 1 லிட்டர் பாலினையும் சர்க்கரையையும் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் சிரப் சேர்க்கவும்

2. பாலை 1/2 லிட்டராக சுண்டக் காய்ச்சி, அது ஆறியவுடன் குளிர்சாதனப்பெட்டியில், ஆறு மணி நேரம் வைத்திருக்கவும்

3. சைனாகிராஸை சூடான நீரில் இட்டு, கொதிக்க வைத்து இறக்கி, 2 மணி நேரம் வரை ஆற வைக்கவும்; இதன்பின்னர், ஒரு 2 மணி நேரம் கழித்து, ஜெல்லி போலுள்ள சைனா கிராஸை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப்பெட்டியில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்

4. பின்பு குளிர்ந்த பாலை எடுத்து, ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதி அளவு ஊற்றி, இதன் மீது ஜெல்லிகளாய் மாறிய சைனா கிராஸ் துண்டுகளை போட்டு, இப்பொழுது ரோஸ், நன்னாரி சிரப்களை ஊற்றவும்

5. தொடர்ந்து வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை பாலின் மேல் வைத்து, அதன் மீது பால்கோவாவைப் பரவலாக தூவி விடவும்.

இத்தனை எளிய செய்முறை கொண்ட மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவினை வீட்டில் தயாரித்து, அடிக்கும் வெயிலுக்கு இதமாக இருக்கும் வகையில் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் அளியுங்கள்.!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon