Link copied!
Sign in / Sign up
1
Shares

பெண்களே! உங்களுக்கு பொடுகு தொல்லையா?

ஆண்களை விட பொடுகு தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். காரணம், பெண்களின் கூந்தல் அடர்த்தி. ஏன்? பெண்களுக்கு மட்டும் தான் பொடுகு தொல்லை வருகிறதா எனக்கூட ஆண்கள் கோபப்படலாம். உங்கள் கோபம் நியாயமானது தான். ஒருவேளை நீங்களும் அந்நியன் விக்ரம் போல் முடி வளர்த்திருந்தால் பெண்களின் தினசரி பொடுகு தொல்லை பிரச்சனையை பற்றி அறிய அதிக வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? பெண்கள் தன்னுடைய வாழ்நாளில் அதிகம் கவனம் செலுத்துவது கூந்தலிலே. ஒரு பெண்ணின் கூந்தல் அழகை பொறுத்தே உடல் தோற்றம் என்பது அமைகிறது. ஆனால், பொடுகு இதற்கு விடுவதில்லை. அதனால் எப்படி விரட்டுவது என என்னுடன் நீங்களும் சேர்ந்து படித்து பயனடையலாமே.

1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை:

தேங்காய் எண்ணெய் என்பது முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை தரவல்லது. அத்துடன் எலுமிச்சையை நீங்கள் சேர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் பொடுகை விரட்ட உங்களால் முடிகிறது.

என்ன செய்ய வேண்டும்?

தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து சூடுப்படுத்தி கொள்ளுங்கள். அத்துடன் லெமன் ஜூஸ் சரி சம அளவில் கலந்துகொள்ளுங்கள். அந்த கலவையை கொண்டு தலையை மசாஜ் செய்துவிடுங்கள். அதன்பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு கழுவிடுங்கள்.

2. வெந்தய பேக்:

வெந்தய விதைக்கு பொடுகை விரட்டும் குணம் உண்டு. 

என்ன செய்ய வேண்டும்?

முதலில் வெந்தய விதையை நீரில் ஊறவைத்துக்கொள்ளுங்கள். அந்த ஊறவைத்த வெந்தய விதை நீரை வடிக்கட்டிவிட்டு., அந்த ஊறிய விதைகளை பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள். அந்த பேஸ்டை தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு வைத்திருந்து ஷாம்பூ போட்டு கழுவிடுங்கள்.

3. தயிர்:

பொடுகு தொல்லையை போக்க உங்கள் வீட்டிலிருக்கும் தயிரே தேவையான உதவியை செய்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தயிரை தடவிக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு வைத்திருங்கள். அதன்பின்னர் மிதமான முறையில் ஷாம்பூ கொண்டு கழுவிடுங்கள்.

4. பேக்கிங்க் சோடா:

வீட்டிலிருக்கும் பேக்கிங்க் சோடாவையும் பயன்படுத்தி தொல்லை தரும் பொடுகு பிரச்சனைக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

கூந்தலை லேசாக ஈரப்படுத்திக்கொண்டு., உங்கள் உச்சந்தலையில் கொஞ்சமாக பேக்கிங்க் சோடாவை தடவிக்கொள்ளுங்கள். அதன்பின்னர் 60 முதல் 90 நொடிகள் வைத்திருந்து தலையை கழுவிவிடுங்கள்.

5. மருதாணி:

மருதாணிக்கு தலையில் உள்ள பொடுகை விரட்டும் குணம் இருப்பதோடு., கூந்தலை மென்மையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 

என்ன செய்ய வேண்டும்?

மருதாணி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறை கலந்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை தோராயமாக 8 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தேய்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு இரண்டு மணி நேரங்கள் கழித்து உங்கள் தலையை கழுவிடுங்கள். 

6. ஆப்பிள் சிடர் வினிகர்:

தலை முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லை என்பது பலருடைய வாழ்வில் தீராத தொல்லையாக இருந்துவருகிறது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் தீர்வை தர வல்லது இந்த ஆப்பிள் சிடர் வினிகர். 

என்ன செய்ய வேண்டும்?

ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் நீரை சரி சம அளவில் கலந்து ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள். எப்போதும் போல் கூந்தலை சுத்தப்படுத்திவிட்டு அதன் பின்னர் இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தேய்த்திடுங்கள். அதன்பிறகு 15 நிமிடங்களுக்கு வைத்திருந்து கழுவிடுங்கள்.

7. வேப்பஞ்சாறு:

வேப்பிலைக்கு பாக்டீரியாவை விரட்டும் பண்பு உண்டு. அத்துடன் பொடுகு தொல்லைக்கு தீர்வையும் தர, இது மிகவும் எளிய முறையாகவும் உங்களுக்கு இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து 10 நிமிடங்களுக்கு வைத்திருங்கள். அதன்பின்னர் நீரைக்கொண்டு உங்கள் தலையை கழுவிடுங்கள்.

8. முல்தானி மிட்டி:

கூந்தலின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது இந்த முல்தானி மிட்டி. மேலும் பொடுகை விரட்டி மென்மையான கூந்தலையும் தர வல்லது.

என்ன செய்ய வேண்டும்?

முல்தானி மிட்டி, தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக்கொள்ளுங்கள். அந்த பேஸ்டை உங்களுடைய உச்சந்தலை மற்றும் கூந்தலில் தேய்த்திடுங்கள். அதன்பிறகு 20 நிமிடங்கள் கழித்து., தண்ணீரை கொண்டு கழுவிடுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon