Link copied!
Sign in / Sign up
1
Shares

புட்டி பாலில் குழந்தைகள் குடிக்க தயங்குவது ஏன்? தவிர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும் அம்மாக்கள் ஒரு சில பொதுநலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட மாதங்களுக்கு அப்புறம் புட்டி பாலுக்கு மாறிவிடுவர். இதற்கு முக்கிய காரணம், வெளியில் செல்வது, பேருந்தில் பயணம் செல்வது போன்ற சூழ்நிலையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதென்பது மிகவும் கடினமான காரியம். ஒரு சில பெண்கள் தாய்ப்பால் கொடுக்க கூச்ச சுபாவம் கொள்வதுமுண்டு. அதனால் தாய்ப்பால் கொடுப்பதற்கு பதிலாக வெளியில் அழைத்து செல்லும்போது குழந்தைகளுக்கு பால் புட்டியில் பாலை தர, அம்மாக்கள் கற்று கொடுப்பர். ஆனால், ஒரு சில குழந்தைகள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. என்ன காரணம்? வாருங்கள் என்னுடன் சேர்ந்து பயணித்து படித்தறியலாம்.

1. குழந்தை வளர்ச்சி:

உங்கள் குழந்தையின் வளர்ச்சி அசாதாரண நிலையிலிருக்கும் போது அவர்கள் பால் புட்டியில் பாலை குடிக்க தயங்குகின்றனர். நீங்கள் கவனித்து பார்த்தால் நன்றாக தெரியும்., குழந்தைக்கு தாய்ப்பால் தரும்போது அவர்கள் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க செய்வர். அப்படி இருக்கும்போது அவர்களுடைய வளர்ச்சி என்பது அதிகமாக காணப்பட, உணரும் தன்மையை விரைவில் பெற்று பால் புட்டியை தவிர்க்கின்றனர். அப்போது தலையை திருப்பிக்கொள்ள செய்யும் குழந்தைகள் சில சமயத்தில் தள்ளிவிடவும் கூடும்.

2. உறிஞ்சுவதில் ஆர்வம் குறைவு:

கருவிலிருக்கும் குழந்தைகள் வாயில் விழுங்கியபடி இருப்பதுண்டு. இந்த காரணத்தினாலே குழந்தைகள் தாய்ப்பால் பருகும்போதும், புட்டி பால் பருகும்போதும் உறிஞ்சுவதற்கு ஏதுவாக நடந்து கொள்கின்றனர். ஆனால் இந்த பழக்கம் என்பது நான்கு மாதங்களே குழந்தையிடம் இருக்க, சலிப்பு தட்டி உறிஞ்சுவதை தவிர்க்கின்றனர். இதனாலே, குழந்தைகள் வாயில் பாட்டில் வைக்கும்போது அதை உதறி தள்ள செய்கின்றனர்.

3. மார்பக முலைக்காம்பு மற்றும் பால் புட்டி வித்தியாசம்:

குழந்தைகளுக்கு அம்மாக்கள் தொடர்ந்து தாய்ப்பால் தந்துவர, திடீரென பால் புட்டிக்கு மாறும்போது குழந்தைகள் அதை ஏதோ விசித்திர பொருளாக பார்த்து விலகி செல்வதுண்டு. காரணம், முலைக்காம்பு வழியாக தாய்ப்பால் பருகியவர்களுக்கு., திடீரென வழுவழுப்புடன் இருக்கும் பொருளை அறிமுகப்படுத்த, அதை எப்படி ஏற்றுக்கொள்வது எனும் குழப்பம் குழந்தைகள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. 

4. வேறு ஒருவர் பால் புட்டி தரும்போது:

குழந்தைகள் பால் புட்டியில் குடித்துவர, நீங்கள் வேறு ஒருவரை வைத்து குழந்தைகளுக்கு பாட்டில் பால் தரும்போது குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்ள சற்று முரண்டு பிடிப்பர். ஏன் என் அம்மா இன்று புட்டி பால் தர வரவில்லை எனும் ஏக்கம் அவர்கள் மனதில் காண செய்யும்.

5. தாய்ப்பால் தரும் நிலை:

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும்போது அம்மாக்கள் ஒரே நிலையை பின்பற்றுவர். இதனால் அவர்களுக்கு புட்டி பால் பழக்கும்போது மாற்றப்படும் பருகும் நிலையினால் குழந்தைகள் பால் புட்டியில் இருக்கும் பாலை பருக பயப்படுகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?
1. தூங்கும்போது தருதல்:

குழந்தைகள் அரைநிலையில் தூங்கும்போது பால் புட்டியில் பாலை கொடுக்க பழக்கப்படுத்தலாம். ஆனாலும் இது மிகவும் பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், அவர்களுக்கு புட்டிப்பால் தரும் நீங்கள் அவர்களின் தூங்கும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, எப்படி கொடுக்க வேண்டுமென மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறாமல் கொடுக்க முயலாதீர்கள். மேலும், அவர்கள் முழுவதுமாக விழித்துக்கொண்டிருக்கும்போது பால் புட்டியில் பாலை தரலாம்.

2. குளியல் முறை:

குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டும் போது அவர்கள் ஓய்வு நிலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் பால் புட்டியில் பால் தரும்போது குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்வர்.  

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon