Link copied!
Sign in / Sign up
7
Shares

பீட்ரூட் வடை செய்வது எப்படி?

இரத்தசோகை போன்ற பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தரும் காய்கறிகளுள் முதன்மையானது பீட்ரூட் தான். இந்த பீட்ரூட்டை பொரியல் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. காரணம், ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்ய பீட்ரூட் நமக்கு உதவுகிறது. ஒரு சிலர் பீட்ரூட்டில் தோசை செய்து சாப்பிடவும் செய்வர். இன்னும் ஒரு சிலர் பீட்ரூட்டில் வடையும் செய்ய முடியும் என்கின்றனர். அது எப்படி என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

பீட்ருட் - 1 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 3 

மிளகாய் வற்றல் - 2 

இஞ்சி - சிறு துண்டு 

கொத்தமல்லி, கறிவேப்பிலை -சிறிதளவு 

கடலைப் பருப்பு -1 கப் 

அரிசி - 2 தேக்கரண்டி 

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 5

செய்முறை:

1. கடலைப் பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

2. அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

3. கடலைப் பருப்பு ஊறியதும் தண்ணீரை வடித்து ஏற்கெனவே அரைத்துவைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள்.

4. அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத் தூள், துருவிய பீட்ருட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள்.

5. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை வட்டமாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

6. அவ்வளவு தான் சுவையான பீட்ரூட் வடை இதோ ரெடி.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon