Link copied!
Sign in / Sign up
0
Shares

பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கே தெரியும்! தன் வாழ்நாள் அதிகமென...

குழந்தைகள் இருக்கும் வீட்டில் குதூகலத்துக்கு பஞ்சமேது என்பது புதுமொழி. ஆம், ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தால் அழுகை சத்தம் கேட்பதை கூட அம்மா என்பவள் அழகாக பார்த்து ஏங்குகிறாள். அப்படி இருக்கும்போது அவளுக்கு இன்பம் தரும் கடவுளாக இந்த உலகில் வேறு யார் இருக்க போகிறார்கள். கர்ப்பமாக இருக்கும்போது ஒரு பெண் அடையும் வலி மற்றும் வேதனையை விட இவ்வுலகில் பெரிது ஒன்றுமில்லை. அதேபோல் பிள்ளை பெற்றெடுத்த பின்னர் அவளை போல் இவ்வுலகில் சந்தோஷத்தையும் வேறு யாராலும் அனுபவிக்க இயலாது. இது வாய்வழி சொல் என மட்டும் நினைக்காதீர்கள். அதையும் தாண்டிய ஆய்வின் முடிவாகவும் இது அமைய, அதைப்பற்றிய அழகிய பதிவு தான் இது.

ஆய்வு #1:

அதாவது கடைசி குழந்தையை பெற்றுக்கொண்ட உணர்வை பெரும் அம்மாக்கள் முற்றிலும் ஒருவித மன நிம்மதியை பெறுகின்றனராம். ஆம், முதல் குழந்தையை அம்மாக்கள் பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் இளமையை நினைத்த சிறிய ஏக்கம் இருக்கிறது. அதுவே குழந்தை வளர்ப்பு என வந்தபிறகு பழகிப்போய்விட, அதன் பின்னர் அம்மாக்கள் குழந்தையின் நலன் மீது மட்டுமே முழு அக்கறையை செலுத்த தொடங்குகின்றனர். இதனால் தன் உடல் நலன் பற்றிய கவலையை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

ஆய்வு #2:

ஒரு ஆய்வு நிறுவனம் 462 பெண்களை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட, கிடைத்த முடிவோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களை இரு குழுவினராக பிரித்த வல்லுனர்கள், அவர்களின் கடைசியாக குழந்தை பெற்றுக்கொண்டவரையும், முதல் குழந்தை பெற்றுக்கொண்டவரின் செயல்களையும் கண்காணிக்க, கடைசி குழந்தையை பெற்றுக்கொண்ட அம்மாக்கள் அதிகம் சந்தோஷத்துடன் இருந்தது தெரியவந்தது. இதன்மூலமாக இவர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு பெண் இயற்கையாக 33 வயதுக்கு பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது 95 வயது வரை அவள் வாழ அதிகம் வாய்ப்பிருக்கிறதாம்.

ஆய்வு #3:

பெண்களின் உடல் நலம் கடைசி குழந்தையை பொறுத்து அமைகிறதா என முதிர்வு நிலை ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட, இதன் முடிவாக இரு காரணங்களும் கூறப்படுகிறது. குழந்தைகளை அம்மாக்கள் கடைசியாக பெற்றுக்கொள்ளும்போது அவர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாகவும், குழந்தைகளை பெற்றுக்கொண்ட அம்மாக்களின் இனப்பெருக்க உறுப்பு என்பது சிறந்த நிலையை அடைவதாகவும் சொல்கின்றனர்.

என்ன காரணங்கள்?

பொதுவாக பெண்கள் முதல் முறை கர்ப்பமாகும் போது ஒருவித குழப்பமான மனநிலையுடன் இருப்பார்கள். காரணம், பிறக்க போகும் குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என்பதில் தொடங்கி, அது ஆணா? பெண்ணா? என யோசிப்பது வரை எல்லாமே அவர்கள் மனதில் எண்ண ஓட்டமாய் செல்ல, குழந்தை பிறந்த பின்னர் அந்த மன அழுத்தங்கள் ஒரு மடங்கு அதிகரிக்க செய்கிறது. குழந்தை பராமரிப்பில் சற்று திணறி, கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ளும்போது இதே குழப்பம் தான். முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் என்ன வித்தியாசம் எனும் குழப்பம் அவர்களிடையே இருக்க, அப்போதும் சற்று குறைவான மன அழுத்தம் கொண்டு காணப்படுவர். ஆனால், அதன்பிறகு இது அவர்களுக்கு சகஜமாக கடைசி குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் போது, மற்ற குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமெனவும் அவள் அனுபவம் அடைகிறாள். இதனால் அவளை பற்றிய மன அழுத்தம் குறைந்து தெளிவான முகத்துடன் தன்னலம் பேணி பாதுகாக்க அவள் மறுத்துவிடுகிறாள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon