Link copied!
Sign in / Sign up
1
Shares

50க்கும் மேல் ஹிட் திரைப்படங்கள் தந்த பிரபல இயக்குனர் காலமானார் - திரை உலகம் கண்ணீர் அஞ்சலி

1957 ஆம் ஆண்டு வெளிவந்த முதலாளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் முக்தா ஸ்ரீநிவாசன். அவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடி தர, அதன்பிறகு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பெரிய ஹீரோக்களை வைத்து பல நல்ல கதைகளை தமிழ் சினிமாவிற்கு அளித்ததோடு., தனக்கென ஒரு தனி இடத்தையும் தொடர் ஹிட் மூலம் திரை உலகத்தில் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். 

இவருடைய இயக்குனர் திறமையை கண்டதால் ஜெயலலிதாவின் 100 ஆவது படமான சூரியகாந்தியை இயக்கவும் வாய்ப்பு கிடைத்த பெருமை முக்தா ஸ்ரீநிவாசனையே சேரும். அதன்பிறகு ரஜினி நடித்து ரசிகர்களை கரோகோச ஒலி எழுப்ப செய்த பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கினார். சூப்பர் ஸ்டார் என நாம் அழைக்க காரணமாக அமைந்த படங்களுள் பொல்லாதவனும் ஒன்று என்பது நம்மால் மறுக்க முடியாது.

ரஜினி தன் பரட்டை தலையை ஸ்டைலாக திருப்பி விட்டால் திரையரங்கமே அதிரும். அதை சமீபத்தில் கபாலியில் கூட ஒரு சில காட்சிகளில் நாம் கண்டோம். "நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்..." எனும் பாடல் ரஜினிக்காகவே எழுதப்பட்ட குறும்புத்தனமான சூப்பர் ஹிட் பாடலும் கூட. 

மேலும், முக்தா ஸ்ரீநிவாசன் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து அவரை நல்லவரா? கெட்டவரா? என குழப்ப வைத்த நாயகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக பொறுப்பேற்றார். இது கமல் சினிமா வாழ்க்கையை சரித்திரமாக மாற்றிய ஒரு படமும் கூட என்பதில் சந்தேகமே வேண்டாம்.

முக்தா ஸ்ரீநிவாசன் 65 படங்களை இதுவரை இயக்கி உள்ளார். அத்துடன் அவர் இயக்கிய முதலாளி திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவில் தரமிக்க திரைப்படங்களை இயக்கி, தயாரித்ததோடு அரசியல் ஈடுபாடும் கொண்டவர் முக்தா ஸ்ரீநிவாசன். ஆம், ஒரு காலத்தில் காங்கிரஸ் என்றால் அது ஜி.கே.மூப்பனார் பெயரையே பெருமையுடன் உச்சரித்தது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக விளங்கியவரும் கூட முக்தா ஸ்ரீநிவாசன். மேலும் தமிழ்நாட்டின் காங்கிரஸ் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மீதிருந்த காதலால் அதன்பின்னர் 350 சிறுகதைகள் வரை தமிழுக்கு தந்ததோடு 3 நாவல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களுள் 'தமிழ் திரைப்பட வரலாறு', 'கலைஞர்களோடு நான்', 'கதாசிரியர்களோடு நான்', 'அறிஞர்களோடு நான்' ஆகியவை முக்கிய பங்கினை வகித்தது.

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த முக்தா ஸ்ரீநிவாசன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டும் வந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு துரதிர்ஷ்ட வசமாக உடல் நலம் முற்றிலும் குன்றி உடலை இவ்வுலகிற்கு தந்து மறைந்தார். திரைப்பிரபலங்கள் இவரை பற்றி சொல்லும்போது தமிழ் சினிமாவிற்கே இன்று மீளா துயரத்தை தந்து சென்றுவிட்டார் முக்தா ஸ்ரீநிவாசன். அவருடைய இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என தன் இரங்கலை பதிவு செய்திருக்கின்றனர். 

அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் பொல்லாதவன் மூலமாகவும், வாங்கிய விருதுகள் மூலமாகவும், எழுதிய கதைகள் மற்றும் தயாரித்த திரைப்படங்கள் மூலமாகவும் என்றும் வலம் வரும். 

தமிழ் பெருமை பேசி உயிர் துறந்த முக்தா ஸ்ரீநிவாசன் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon