Link copied!
Sign in / Sign up
27
Shares

நீங்கள் செய்து, சுவைத்ததுண்டா, நாட்டுக்கோழி சுக்கா?

பொதுவாகவே, பிராய்லர் கோழியை விட, நாட்டுக்கோழியே சுவை மிகுந்ததாகவும், உடலுக்கு நன்மை செய்வதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட நாட்டுக்கோழியை சுக்காவாக செய்து உண்டால், சுவை அட்டகாசமாக இருக்கும். இப்பொழுது இந்த ஆரோக்கியம் தரும் நாட்டுக்கோழியை வைத்து சுவையான, நாட்டுக் கோழி சுக்கா செய்வது எப்படி என இப்பதிப்பில் படித்தறிவோம்!

தேவையான பொருட்கள்!

நாட்டு கோழி – அரை கிலோ/ சின்ன வெங்காயம் – 30/ இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்/ மல்லித்தூள் – 3 ஸ்பூன்/ மிளகாய் தூள் – 1 ஸ்பூன்/ மிளகு – 1 ஸ்பூன்/ சீரகம் – 1 ஸ்பூன்/ கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்/ மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்/ தேங்காய்/ கசகசா – 1 ஸ்பூன்/ முந்திரிபருப்பு – 5/ பட்டை – 2/ கிராம்பு – 2

செய்வது எப்படி?

1. ஒரு வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் கிராம்பு போட்டு தாளித்துக் கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை இதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. பின்பு, அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, நாட்டுக் கோழி கறியையும் இதனோடு சேர்த்து வதக்க வேண்டும். 

3. இதன்பின், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, 2 டம்ளர் நீர் ஊற்றி உப்பு சேர்த்து, கோழிக்கறியை வேக வைக்கவும்; தண்ணீர் சற்று வற்றியதும், தேங்காய்-சீரகம்-முந்திரி-மிளகு-கசகசா போன்றவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து, இதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

4. இப்பொழுது குழம்பின் மீது, தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, குழம்பு சற்று சுண்டியவுடன், நறுக்கிய மல்லித்தழைகளை குழம்பின் மீது தூவி இறக்கி, பரிமாறவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon