Link copied!
Sign in / Sign up
39
Shares

நீங்கள் செய்து சுவைத்ததுண்டா கும்பகோணம் கொஸ்து?

பயறு வகைகளை கொண்டு செய்யப்படும் ஸ்பெஷலான ஒரு உணவு தான் இந்த கும்பகோண கொஸ்து. கும்பகோணத்தில் என்ன பேமஸ் என எல்லோரிடமும் கேட்டால் அவர்களுக்கு முதலில் நினைவில் வருவது டிகிரி காபி தான். அந்த காபியின் சுவை மட்டுமா நாவில் ஊறுகிறது. அட இல்லைங்க, இந்த கும்பகோண கொஸ்துவின் சுவையும் தான் என்கின்றனர் இங்கே இருப்பவர்கள். அப்படி என்ன தான் இதில் இருக்கிறது. பார்க்கலாமா! 

கும்பகோணம் கொஸ்து செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - 1 கப் 

பச்சைப் பயறு - 2 கரண்டி 

நிலக்கடலை - 2 கரண்டி 

கொள்ளு - 2 கரண்டி 

தக்காளி - 2 

பச்சை மிளகாய் - 4 

பச்சை கத்தரிக்காய் - 2 

காய்ந்த மிளகாய் - 2 

கடுகு -1/2 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 

கறிவேப்பிலை - சிறிதளவு 

சீரகம் - 1/4 தேக்கரண்டி 

சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 2

செய்முறை:

1.பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அவற்றை வேகவைத்து அவற்றுடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சூட்டடுப்பில் வைத்து ஒரு சத்தம் வந்ததும் தணலைக் குறைத்து 5 நிமிடம் வேகவையுங்கள்.

3. ஒரு தேக்கரண்டி நெய்யை வாணலியில் போட்டு அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துச் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.

4. இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon