Link copied!
Sign in / Sign up
5
Shares

நாட்டு கோழி சூப் செய்வது எப்படி?

நாட்டுக்கோழி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அப்படி கிடைத்துவிட்டால் அதிலிருக்கும் சத்துக்கள் உங்கள் உடலை சேராமல் ஒரு போதும் செல்லாது. ஆம், என்னதான் பிராய்லர் கோழியை நாம் உண்டாலும், நாட்டுக்கோழி குழம்பின் ருசிக்கு ஈடேது என்பது இந்த உலகமறிந்த உண்மை. நாட்டுக்கோழியில் நமக்கு தேவையான எல்லாவித எதிர்ப்பு சக்தியும் கிடைத்திட, மாலை நேரத்தில் ஒரு சூப் வைத்து குடித்தால் தான் என்ன! அட ஆமாங்க, இப்போது நாம் பார்க்க போவது நாட்டுக்கோழி சூப் எப்படி செய்வது என்பதை தான். பார்க்கலாமா!

தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி – 1/4 கிலோ (எலும்புடன்) 

சின்ன வெங்காயம் – 12 

தக்காளி – 1 

பச்சை மிளகாய் – 2 

பூண்டுப் பல் – 7 

மிளகு (பொடித்தது) – 1 தேக்கரண்டி 

சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. கறியைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

2. அத்துடன் 3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து நசுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்குங்கள். 

3. அவ்வளவு தான் சுவையுடன் சூடான நாட்டுக்கோழி கோழி சூப் தயார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon