Link copied!
Sign in / Sign up
1
Shares

தாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்

ஒரு குழந்தைக்கு அம்மா ஆவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதம் என்பதை தாண்டி உலக அதிசயங்களுள் ஒன்று எனவே கூற வேண்டும். ஆம், கர்ப்ப காலத்தில் பல வித மாற்றங்களை சந்திக்கும் கர்ப்பிணி பெண்ணவள் அவற்றை வியப்புடன் பார்க்க அதில் ஒன்று தான் முதல் அல்ட்ரா சவுண்ட். ஒரு குழந்தையின் அசைவை அழகாக காட்டும் இந்த முறை, கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையையும் தருகிறது. இவற்றை கடந்து பிரசவித்த பின்னர் தாய்மையை ஏற்றுக்கொள்ளும் அவள் குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை மிகவும் பெருமையுடன் பார்க்கிறாள். தாய்ப்பால் விட சத்தான உணவு இந்த பூமியில் ஏது!

1. கால்சியத்தின் தேவை:

பொதுவாக பெரும்பாலான கர்ப்பிணி பெண்களும், அன்னைகளும் குறைவான அளவில் கால்சியத்தை எடுத்துக்கொள்கின்றனர். 10 மாநில புள்ளி விவர கணக்குப்படி தெரிய வருவது என்னவென்றால், கர்ப்பமாக இருக்கும்போதும்., தாய்ப்பால் தரும்போதும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் அளவு என்பது 400 mg கால்சியமாம். ஆனால் ஒரு நாளைக்கு அவர்கள் 1200 mg கால்சியமானது தாய்ப்பால் தரும்போது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2. குழந்தைக்கு தேவையான கால்சியம்:

தாய்ப்பால் தரும் முதல் 6 மாதங்களில் குழந்தைக்கு தேவையான கால்சிய அளவாக 200 முதல் 300 mg வரை தினமும் தேவைப்படுகிறது. இந்த கால்சிய ஊட்டச்சத்தால் குழந்தைகளின் எலும்பும், பற்களும் வலுவடைகிறது. குழந்தைகளின் உடலில் இருக்கும் கால்சியத்தில் 99 சதவிகிதம் பற்களுக்கும், எலும்புக்கும் தேவைப்படுகிறது.

3. மகப்பேறில் இழக்கும் கால்சியம்:

கர்ப்ப காலத்தை விட தாய்ப்பால் தரும் 9 மாதங்களில் இழக்கக்கூடிய கால்சியத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதனால் எலும்பு தாது அடர்த்தி என்பது உங்கள் உடலில் குறைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

4. கால்சிய குறைபாடு:

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும்போது அம்மாக்களின் உடம்பிலிருக்கும் கால்சியத்தின் அளவானது குறைந்துக்கொண்டே இருக்கக்கூடும். அதாவது தாய்ப்பால் தரும் அம்மாக்களின் உடலில் இருக்கக்கூடிய கால்சியம் 200 முதல் 300 mg வரை ஒரு நாளைக்கு குறைகிறது.

5. எலும்பின் நிறை:

தாய்ப்பால் தரும் அம்மாக்களின் உடல் இளைத்து காணப்படுவதை கண்டிருப்பீர்கள். ஒரு ஆய்வின்படி தெரியவருவது எண்னெவென்றால்., ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் தருவதன் மூலமாக 3 முதல் 5 சதவிகித எலும்பு நிறை என்பது அம்மாக்களிடமிருந்து இழக்கப்பட, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தாகவும் மாறுகிறதாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon