Link copied!
Sign in / Sign up
1
Shares

தாய்ப்பால் தரும் அம்மாக்களின் முலைக்காம்பை பிள்ளைகள் கடிப்பது ஏன்?

தாய்ப்பால் தருவது என்பது எல்லா அம்மாக்களுக்கும் அனுபவ பாடமாக அமைய, அதுவும் வேறுபட்ட வகையில் அமைகிறது. ஒரு சில தாய்மார்கள் பிள்ளைக்கு தாய்ப்பால் தருவது குறைந்து காணப்படுகிறது என துணை பொருளை உண்டு பால் சுரப்பை அதிகரிக்க செய்வர். ஒரு சிலருக்கோ தாய்ப்பால் அதிகம் சுரக்க எவ்வளவு ஒரு நாளைக்கு தன் குழந்தைக்கு தர வேண்டுமென தெரியாமல் தவிப்பர். அப்படி இருக்க ஒரு சிலர் பயப்படும் விஷயத்தை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். அது என்னவென்றால் குழந்தைகள் தாய்ப்பால் பருகும்போது திடீரென தாயின் முலைக்காம்பை கடிப்பது பற்றி தான்..

எப்போது செய்கிறார்கள்?

1. குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தாய்ப்பால் தந்தால் மார்பக முலைக்காம்பை அவர்கள் கடிக்கக்கூடும்.

2. அதுபோல் தாய்ப்பால் பருகிவிட்டு வாயை எடுத்து மீண்டும் வாய் வைக்கும்போது அவர்கள் கடிக்கக்கூடும்.

3. குழந்தைகள் தாய்ப்பால் பருகியபடி தூங்கிவிட்டால் மார்பக முலைக்காம்பை கடிக்க செய்வார்கள்.

4. குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் கடினமான முறையில் பாலை பருக செய்வர். அப்போதும் கடிக்க செய்கிறார்கள்.

5. விளையாட்டுத்தனமாக கூட கடிக்க செய்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

1. உங்களுடைய சிறு விரலை குழந்தையின் வாய் ஓரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மார்பக முலைக்காம்பை கடிப்பதற்கு பதில் உங்கள் விரலை மட்டுமே கடிக்க செய்கிறார்கள்.

2. குழந்தைகள் மார்பக முலைக்காம்பை கடிக்கும்போது வெடுக்கென இழுக்காதீர்கள். அது ஒரு விளையாட்டுத்தனமாக அவர்களுக்கு தெரிய மீண்டும் முயற்சி செய்யக்கூடும்.

3. ஒரு சில குழந்தைகள் கடிக்கும்போது நீங்கள் தரும் பாவனைகளால் பயப்படவும் செய்வர். இதனால் மீண்டும் தாய்ப்பால் குடிக்க அவர்கள் தயங்கவும் கூடும்.

4. குழந்தைகள் மார்பக முலைக்காம்பை கடிக்கும்போது மெல்ல அவர்களை விலக்கி சிறிது இடைவெளி தாருங்கள்.

5. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும்போது உங்கள் பார்வை அவர்களுடைய கண்களை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

6. தாய்ப்பால் தரும் சரியான முறையை பின்பற்ற வேண்டும். இல்லையேல் குழந்தைகள் முலைக்காம்பை கடிக்க செய்வர். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon