Link copied!
Sign in / Sign up
3
Shares

தாய்ப்பால் தருபவர்கள் முட்டைக்கோஸ் இலையை மார்பில் வைக்க என்ன காரணம்?

புதிய அம்மாக்களுக்கு தலையாய கடமைகளுள் ஒன்றாக அமைவது தாய்ப்பால் தருவது. ஆனால், இந்த தாய்ப்பால் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி சுரப்பதில்லை. குழந்தைகள் அதிகம் பால் பருகும்போது தாய்ப்பாலும் அதிகம் சுரக்க செய்கிறது. தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதோடு பலவித நன்மைகளையும் செய்கிறது. ஆனால் ஒரு சில அம்மாக்களுக்கு தாய்ப்பால் தரும்போது சில சிக்கலையும் சேர்த்து தருகிறது. தாய்ப்பால் தரும் அம்மாக்கள் மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த வித மருந்துகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் மார்பகம் வீங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், கிராம புறங்களில் ஒரு சில அம்மாக்கள் மார்பில் முட்டைக்கோஸ் இலையை வைப்பதன்மூலம் மார்பக வீக்கத்தை குறைக்கின்றனர். அதை பற்றிய சுவாரஸ்யமான அழகிய பதிவு தான் இது. 


முட்டைக்கோஸ் இலைகள் என்ன செய்யும்?

குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகள் மார்பக வலியை போக்கி வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. அதாவது தாய்ப்பால் தரும் 13 முதல் 50 வருட தாய்மார்கள் முட்டைக்கோஸ் இலையை தன் மார்பகத்தில் வைப்பதன் மூலம் வலி மற்றும் கடின நிலையை குறைப்பதோடு, தாய்ப்பால் தரும் நேரத்தையும் அதிகரிக்க உதவுவதாக கூறுகின்றனர். ஆம், இதனால் உங்கள் குழந்தைகளுக்கு 20 நிமிடம் வரை தாய்ப்பால் தர உங்களால் முடிகிறது.

என்ன செய்ய வேண்டும்?

முட்டைக்கோஸ் இலையை முதலில் பிரிட்ஜில் வைத்திடுங்கள். கனடியன் தாய்ப்பால் சங்கம் பரிந்துரைப்பது என்னவென்றால் பசுமையான முட்டைக்கோஸ் இலையை பயன்படுத்த சொல்கிறது. முட்டைக்கோஸ் இலை நன்றாக குளிர்ந்தவுடன் வெளிப்புற முதல் பரப்பை நீக்கிவிடுங்கள். இப்போது உள்ளிருக்கும் சுத்தமான பசுமை இலையை நீங்கள் காண்பீர்கள். இலையின் கீழ் புறத்திலிருக்கும் கடினமான தண்டை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் முட்டைக்கோஸ் இலையை மார்பகத்தில் பொருந்தும்படி மடக்கிக்கொள்ள வேண்டும். முலைக்காம்புகளை இலைக்கொண்டு மறைப்பதை தவிர்க்கவும். அந்த இலைகளை மார்பில் வைத்துக்கொண்டு 20 நிமிடத்திற்கு படுத்திருங்கள். அதேபோல் காட்டன் பிராவையும் நீங்கள் உடுத்திக்கொள்ளலாம். ஆனால், 20 நிமிடங்களுக்கு மேல் முட்டைக்கோஸ் இலையை உங்கள் மார்பில் வைப்பதனால் பால் சுரப்பு குறையவும் வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

நீங்கள் முதல் முறை முட்டைக்கோஸ் இலையை பயன்படுத்தும்போது ஒருவித வலி குறைந்திருக்கும் உணர்வை பெறுவீர்கள். இந்த முறையை பகல் பொழுதில் 2 அல்லது 3 முறை நீங்கள் செய்யலாம். ஒவ்வொரு முறையும் புதிய இலைகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேபோல் இந்த வலி மற்றும் வீக்கம் குறைந்தபின்னரும் இலைகளை பயன்படுத்த முயலக்கூடாது. ஒருவேளை முட்டைக்கோஸ் இலையை மார்பில் வைத்தும் வலி மற்றும் வீக்கம் தொடர்ந்து இருக்குமெனில், மேலும் முயல்வதை தவிர்த்து மருத்துவரை அணுகுவது நல்லது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon